தடைவிதிக்கப்பட்டமை தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை – கூட்டமைப்பு முடிவு

தமிழ் தேசியத்துடன் பயணிக்கும் கட்சிகளை ஒன்றிணைத்து பேச தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவுசெய்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் பிரதிநிதிகள் இன்று மாலை நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் சந்தித்து கலந்துரையாடினர்

குறித்த கலந்துரையாடலில், தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை இம்முறை அனுஸ்டிப்பதற்கு நீதிமன்று தடை விதித்துள்ளமை குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், அதற்கு தமிழ் கட்சிகள் எவ்வகையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பது குறித்து, விரைவாக கூடி கலந்துரையாடி ஒரு முடிவு எடுக்கவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது

அதற்கு தமிழ் தேசியத்துடன் பயணிக்கும் அனைத்து கட்சிகளுக்கும் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை குறித்த கலந்துலையாடலை நடாத்த வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் இலங்கை தமிழரசுக்கட்சி தலைவர்

மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களாட எஸ். சிறீதரன், த.சித்தார்த்தன், வடமாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ்.மாதகரசபை பிரதி மேஜர் து.ஈசன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான பா. கஜதீபன், க.விந்தன், ஜனநாய போராளிகள் கட்சி உறுப்பினர் க.வேந்தன் உட்பட கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்