ஜோர்டான் முன்னாள் பட்டத்து இளவரசர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக தகவல்

தாம் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக மத்திய கிழக்கின் முக்கிய நாடுகளுள் ஒன்றான ஜோர்டானின் முன்னாள் பட்டத்து இளவரசர் கூறியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

மன்னர் அப்துல்லாவின் ஒன்றுவிட்ட சகோதரர் ஹம்சா பின் ஹுசேனின் காணொளி ஒன்று அவரது வழக்கறிஞர் மூலமாக பிபிசி செய்தி நிறுவனத்திற்கு  கிடைத்துள்ளதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

மேலும் அந்த காணொளியில் பேசும் ஹம்சா, நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் திறனற்றவர்களாகவும் ஊழல்வாதிகளாகவும் இருப்பதாக குற்றம்சாட்டுகிறார்.

ஜோர்டானில் மன்னரை ஆட்சியில் இருநது அகற்றுவதற்குச் சதி நடப்பதாகக் கூறி பல முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், ஹம்சாவின் வீடியோ வெளியாகி உள்ளது.

இளவரசர் ஹம்சா வீட்டுக் காவலில் இருப்பதாகக் கூறப்படும் தகவலை இராணுவம் மறுத்துவிட்டது.