செயற்கைச் சூரியனை உருவாக்கும் 30 நாடுகள்

தடையில்லா மின்னாரத்தை உலகிற்கு வழங்கவென செயற் கையான சூரியனை அணுசக்தி மூலம் உருவாக்கும் முயற்சியில் 30 நாடுகள் இணைந்து பிரான்ஸின் தென் பகுதியில் பணியாற்றி வரு கின்றன.

The International Thermonuclear Experimental Reactor (ITER) என்ற இந்த திட்டத்தில் அமெரிக்கா, ரஸ்யா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, யப்பான் தென்கொரியா ஆகிய நாடுகள் இணைந்து பணி யாற்றி வருகின்றன.

அணுக்களை ஒருங்கிணைப் பதன் மூலம் அதிக சக்தியை உரு வாக்க முடியும், இது தற்போதுள்ள அணுசக்தி மின்னார உற்பத்தியை விட பல மடங்கு சக்தி வாய்ந்தது. ஆனால் இந்த பொறிமுறை சூரியனிலும், நச்சத்திரங்களிலும் தான் நிகழந்து வருகின்றது. பூமியில் அதனை உருவாக்குவதற்கு மிக உயர் வெப்பநிலை மற்றும் அமுக்கம் தேவை.

அதனை எட்டுவதற்கு பல நடுகளின் தொழில்நுட்பங்கள் இணைக்கப்படுகின்றன. ரஸ்யாவின் ரொசோடம் எரிசக்தி நிறு வனமும் இந்த திட்டத்திற்கு தேவையான 25 இற்கு மேற்பட்ட சாதனங்களின் தொழி நுட்பத்தை வழங்கியுள்ளது. உக்ரைன் சமர் காரணமாக ரஸ்யா மீது விதிக்கப்பட்ட தடைகளினால் தாமதம் ஏற்பட்டபோதும் தற்போது அதனை மீண்டும் விரைவாக நடைமுறைப்படுத்தும் நோக்கத்துடன் இந்த திட்டத்தின் தலைவர் பிரோ பராபாசி ரஸ்யாவுக்கு சென்றுள்ளதாக ரஸ்யாவின் ஊடகங்கள் கடந்த செவ்வாய்க்கிழமை(8) தெரி வித்துள்ளன.