செப்ரம்பர் மாதம் தடுப்பு மருந்து வந்துவிடும் – ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம்

கோவிட்-19 வைரஸ் இற்கான தடுப்பு மருந்து பொதுமக்களின் பாவனைக்கு எதிர்வரும் செப்ரம்பர் மாதம் வந்துவிடும் என ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தின் வைரஸ் தொடர்பான ஆய்வுப் பேராசிரியர் சார கில்பேட் பி.பி.சி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

இந்த மருந்தின் உற்பத்தி வடிவமைப்பு நிறைவடைந்துவிட்டது, அதனை மனிதர்களில் பரிசோதனை செய்யும் நடவடிக்கைகளை நாம் விரைவில் ஆரம்பிக்கவுள்ளோம்.

அதன் பின்னர் அதனை மிக அதிக அளவில் உற்பத்தி செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்படும். பரிசோதனைகளை மேற்கொள்ளாது உற்பத்தியை ஆரம்பிக்க முடியாது. அது மனிதர்களுக்கு விசத்தை கொடுப்பது போல ஆகிவிடும்.

எனினும் நாம் உற்பத்தியை ஆரம்பிக்கும் போது பில்லியன் கணக்கான மருந்துகளை விரைவாக உற்பத்தி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.