செக் குடியரசில் பல்கலைக்கழகத்தில் தாக்குதல் – 15 பலி, 25 பேர் காயம்

செக் குடியரசின் தலைநகர் பிராக்கில் உள்ள சார்ள் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் சக மாணவர்கள் மீது மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இதுவரையில் 15 பேர் கொல்லப்பட்டதுடன், 25 இற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

praque 4 செக் குடியரசில் பல்கலைக்கழகத்தில் தாக்குதல் - 15 பலி, 25 பேர் காயம்கலைப்பீட மாணவர் ஒருவரே இந்த தாக்குதலை தன்னியங்கி துப்பாக்கியின் மூலம் மேற்கொண்டுள்ளார். பல்கலைக்கழகத்தின் நான்காவது தளத்தில் இருந்து எதிரில் உள்ள கட்டிடங்கள் விரிவுரை மண்டபங்கள் மற்றும் வீதியால் சென்றவர்கள் மீது சரமாரியான துப்பாக்கி பிரயோகத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.

துப்பாக்கிதாரி சுடும் காணொளிகளும் சமூகவலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. துப்பாக்கி தரியின் தாக்குதல்களில் இருந்து தப்பிப்பதற்காக மாணவர்கள் அருகில் உள்ள கட்டிடங்களின் கூரைகளில் கூட்டமாக ஒளிந்துள்ள காட்சிகளும் வெளியாகியுள்ளன.

இந்த தாக்குதலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் 200 இற்கு மேற்பட்ட மாணவர்களை அங்கிருந்து பாதுகாப்பாக அகற்றியுள்ளனர். அதேசமயம் பெருமளவான மாணவர்கள் உதவி உதவி என கத்தியவாறு வீதிகளால் ஓடும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.

எனினும் இந்த தாக்குதலை மேற்கெண்ட டேசிவட் கொசக் என்ற 24 வயதான மாணவர் பின்னர் தன்னை தானே சுட்டு படுகொலை செய்துள்ளதாகவும், அவரின் உடலை நான்காவது தளத்தில் இருந்து மீட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொலையாளி பிராக் நகரில் இருந்து 21 கி.மீ தொலைவில் உள்ள இடத்தில் வசிப்பவர்.

இன்று காலை அவர் தனது தந்தையையும் சுட்டு படுகொலை செய்த பின்னரே இந்த கோரச்சம்பவத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்கா போன்ற நாடுகளில் இடம்பெறும் துப்பாக்கி சூட்டு சம்பவங்களால் ஈர்க்கப்பட்ட அவர் இதனை மேற்கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த 30 வருடங்களில் அங்கு இடம்பெற்ற மிக மோசமான சம்பவம் இதுவாகும். இந்த சம்பவத்தை கேட்டு தான் அதிர்ச்சியடைந்ததாகவும், இறந்த மாணவர்களின் குழும்பங்களுக்கு தனது அனுதாபங்களை தெரிவிப்பதாகவும் சென் குடியரசின் அரச தலைவர் பெற்ர பாவல் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தனது காதினுள் ஏரோ ரிற்காரமிடும் சந்தம் கேட்பதாகவும், இந்த நாள் மோசமான நாள், வாழ்க்கை பிடிக்கவில்லை, நான் தேனீர் இருந்துகிறேன், என்னை நானே கொல்ல வேண்டும்.

இந்த உலகத்தை வெறுக்கிறேன், அதிக வலிகளை இந்த உலகத்திற்கு விட்டுச் செல்லவேண்டும் என்ற வாசகங்களை கொலையாளி இந்த தாக்குதலுக்கு முன்னர் ரெலிகிராம் சனலில் ரஸ்ய மொழியில் எழுதிச்யுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.