சுவிஸ் தூதரக அதிகாரி விவகாரம்: கொழும்பு வந்த சிறப்புத் தூதுவர் – தினேஷ் பேச்சு

சுவிற்ஸர்லாந்து வெளிவிவகார அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்ட சிறப்புத் தூதுவரான ஜோக் டிரைடன் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தவை மாலை சந்தித்து கலந்துரையாடினார்.

சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகப் பெண் கடத்தல் மற்றும் கைது விவகாரத்தைக் கையாள்வதற்காக சுவிற்ஸர்லாந்து பிரதிநிதியாக ஜோக் டிரைடன் இலங்கையை வந்தடைந்தார்.இவர் எடனடியாகவே வெளிவிவகார அமைச்சருடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

இதேவேளை சுவிஸ் தூதரகப் பெண் பணியாளர் கடத்தப்படடு விசாரணையின் பின் விடுவிக்கப்பட்டார் எனக் கூறப்படுகின்ற சம்பவம் தொடர்பிலான விசாரணையின் தரம் குறித்து கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்றுமுன்தினம் தெளிவுபடுத்தினார்.

இந்தச் சந்திப்புக்கு இத்தாலி, பிரான்ஸ், ஜேர்மன், ரோமானியா, நெதர்லாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.