சுவிஸ் தூதரகத்துடன் தொடர்பை வைத்திருந்த பத்திரிகையாளர் மீது கடும் விசாரணை

கொழும்பில் மேற்கத்தைய தூதரகங்களுடன் தொடர்புகளைப் பேணிவரும் ஊடகத் தரப்புக்களை அரச புலனாய்வு துறை இலக்கு வைக்கத் தொடங்கியுள்ளது எனக் கூறப்படுகின்றது. இதன் தொடர்ச்சியாக சுவிஸ் தூதரகப் பணியாளர் விவகாரம் தொடர்பில் பத்திரிகையாளர் ஒருவரை இலங்கைக் குற்றப்புலானய்வுத் திணைக்களத்தினர் விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.

தூதரகப் பெண் பணியாளர் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் பத்திரிகையாளர் அனுரங்கி சிங் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

‘சண்டே ஒப்சேவர்’ வார இதழின் முன்னாள் ஆசிரியர் தரிசா பஸ்ரியன் தொடர்பிலும் சுவிஸ் தூதரக விவகாரத்தில் அவருக்கு இருக்ககூடிய தொடர்புகள் குறித்தும் பத்திரிகையாளரிடம் விசாரணைகள் இடம்பெற்றன எனவும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அனுரங்கி சிங் பல மணி நேரம் விசாரணைக்குட்படுத்தப்பட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே கொழும்பை மையமாக கொண்ட – தூதரக மட்ட உறவுகளை பேணும் -ஊடகவியலாளர்கள் தொடர்பிலேயே அரசின் பார்வை திரும்பியுள்ளது.