சீனாவின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்திய  ஊடகவியலாளருக்கு  Pulitzer விருது அறிவிப்பு

சீனாவின் மனித உரிமை மீறல் களை அம்பலப்படுத்திய இந்திய வம்சாவளி செய்தியாளர் மேகா ராஜகோபாலனுக்கு Pulitzer பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க பத்திரிகையாளர் ஜோசப் pulitzer நினைவாக பத்திரிகை, நாடகம், இசை உள்ளிட்டதுறையில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் கொலம்பியா பல்கலைக்கழகத்தால்  Pulitzer பரிசு வழங்கப்படுகிறது. இந்தஆண்டுக்கான Pulitzer பரிசு பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

இதில்  சர்வதேச செய்தி சேகரிப்புபிரிவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மேகா ராஜகோபாலனுக்கு  Pulitzer விருது அறிவிக்கப்பட் டுள்ளது.

அமெரிக்காவின் ஆன்லைன் செய்தி ஊடகமான BuzzFeed சார்பில் சீனாவில் சுமார் 6 ஆண்டுகளுக்கும் மேலாக மேகா ராஜகோபாலன் பணியாற்றினார். சீன அரசுக்கு எதிராக செய்திகளை வெளியிட்டதாக கடந்த 2018 ஓகஸ்டில் சீனாவில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.

ஆனால் சீனாவில் அவர் வசித்தபோது ஜின்ஜியாங் பகுதியில் பெரும்பான்மையாக வசிக்கும் உய்குர் முஸ்லிம்களை அந்த நாட்டுஅரசு தடுப்பு முகாம்களில் அடைத்துசித்ரவதை செய்வது குறித்த முக்கிய ஆதாரங்களை திரட்டி,  கடந்த ஆண்டு டிசம்பரில் விரிவான ஆதாரங்களுடன்  செய்தி வெளியிட்டார். இந்த செய்திக்காக அவருக்கு Pulitzer விருது  அவருக்கு  அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.