சீனாவிடம் இருந்து மேலும் 500 மில்லியன் டொலர்கள் கடன்

சிறீலங்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள சீனாவின் உயர்மட்ட குழுவினருக்கும் பிரதமர் மகிந்த  ராஜபக்சவுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுக்களைத் தொடர்ந்து சீனா 500 மில்லியன் டொலர்களை கடனாக வழங்க முன் வந்துள்ளதாக சிறீலங்காவின் திறைசேரி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீன பொதுவுடமைக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், வெளிவிவகார ஆணைக்குழுவின் பணிப்பாளருமான யாங்ஜெய்சி தலைமையில் ஏழு பேர் கொண்ட குழு ஒன்று இந்த வாரம் சிறீலங்காவிற்கு பயணம் மேற்கொண்டிருந்தது.

10 வருடங்களில் மீளச்செலுத்தும் இந்தக் கடன் தொகையினை செலவிடுவதற்கான நிபந்தனைகளை சீனா விதிக்கவில்லை. எனவே கோவிட் 19 நெருக்கடிகளினால் வீழ்ச்சி கண்டுள்ள தனது  பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு சிறீலங்கா இதனை பயன்படுத்தும் என  எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் உதவித்தொகையாக 16.5 மில்லியன் டொலர்களையும் சீனா வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.