சிறீலங்கா போர்க்குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுக்க சீனா தயார்

சிறீலங்காவில் இடம்பெற்ற போரில் தமிழ் மக்களுக்கு எதிராக பெருமளவான மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களை மேற்கொண்ட லெப். ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக மேற்குலக நாடுகளும், அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களும், ஐ.நாவும் கருத்துக்களை வெளியிட்டுவரும் நிலையில் இந்திய படை அதிகாரிகள் அண்மையில் அவரைச் சந்தித்து தமது ஆதரவுகளைத் தெரிவித்திருந்தனர்.

இந்த வரிசையில் தற்போது சீனாவும் இணைந்துள்ளது. இந்த வாரம் இராணுவத் தலைமையகத்தில் சிறீலங்காவுக்கான சீனத் தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி சூ ஜியான்வி அவர்கள் சவேந்திர சில்வாhவை சந்தித்து தனது ஆதரவுகளைத் தெரிவித்துள்ளதுடன், சிறீலங்காவின் முப்படையினருக்குமான பயிற்சிகளை வழங்கவும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

சீனா தனக்கு வழங்கும் ஆதரவுக்கு சில்வா நன்றியை தெரிவித்துள்ளதுடன், இரு நாடுகளும் எவ்வாறு படைத்துறை ஒத்துழைப்புக்களை பலப்படுத்துவது என்பது தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டது.