சிறீலங்கா அரசின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

கடந்த மாதம் சிறீலங்காவின் தென்னிலங்கையிலும், கிழக்குமாகாண தமிழர் பூமியிலும் இடம்பெற்ற முஸ்லீம் தீவிரவாதிகளின் தற்கொலைத் தாக்குதல்களைத் காரணம் காட்டி வடக்கில் தமிழ் மக்களை அச்சுறுத்தி முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை சிறீலங்கா படையினர் கடந்த வாரங்களில் மேற்கொண்டிருந்தனர்.

மாணவ சமூகத்தின் செயற்பாடுகளை மழுங்கடிக்கும் நோக்கத்துடன் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர்களை கைது செய்தும் இருந்தனர்.

jaffuni சிறீலங்கா அரசின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

எனினும் சிறீலங்கா அரசின் இனஅழிப்பின் உச்சக்கட்டமான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மிகவும் உணர்வுபூர்வமாக நேற்று (18) நினைவுகூர்ந்ததாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிகழ்வில் சிறீலங்கா அரநின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் பெருமளவான மாணவர்கள் கலந்து கொண்டிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

jaff univer சிறீலங்கா அரசின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்