சிறீலங்காவில் வெளிநாடுகளின் தலையீடுககளை அனுமதிக்கப்போவதில்லை- சீனா

சிறீலங்காவின் உள்விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடுவதை சீனா ஒருபோதும் அனுமதிக்காது என சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் ஜி நேற்று (14) தெரிவித்துள்ளார்.

நேற்று சிறீலங்கா அரச தலைவர் செயலகத்திற்கு பயணம் செய்த சீனாவின் வெளிவிவகார அமைச்சர் சிறீலங்கா அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்சாவை சந்தித்திருந்தார்.

சீனாவின் வாழ்த்துக்களைத் தெரித்த அவர், சிறீலங்காவின் பொருளாதார அபிவிருத்தி, தொழில்நுட்பம் ஆகியவற்றை மேம்படுத்த சீனா உதவும் என்பதுடன், சிறீலங்காவின் ஒருமைப்பாட்டையும், சுதந்திரத்தையும் சீனா காப்பாற்றும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சிறீலங்காவின் பூகோள பிராந்தி முக்கியத்துவத்தினால் தாம் மிகப்பெரும் அரசியல் அழுத்தங்களைச் சந்தித்துவருவதாக கோத்தபாயா சீனா அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.