சிறீலங்காவில் வறுமைநிலை 43 விகிதமாக அதிகரிக்கும் – உலக வங்கி

தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா நெருக்கடி நிலை காரணமாக சிறீலங்கா அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் அதன் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்து வருகின்றது.

இந்த நிலையில் சிறீலங்காவில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், இந்த வருடத்தின் இறுதியில் அங்கு வாழும் மக்களின் வறுமை நிலை 43.9 விகிதமாக அதிகரிக்கும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.