சிறீலங்காவில் முப்படையினரையும் தாக்கி வரும் கோவிட்-19

சிறீலங்காவில் கடந்த சில தினங்களாக வேகமாக பரவிவரும் கொரோனா வைரசின் தாக்கதிற்கு சிறீலங்காவின் முப்படையினரும் உட்பட்டுள்ளதால் சிறீலங்கா அரசு கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளது.

நேற்று (26) அங்கு 63 பேருக்கு நோய் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 53 பேர் கடற்படையினர். தற்போது வரையில் சிறீலங்காவில் 523 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏறத்தாள 100 இற்கு மேற்பட்ட கடற்படையினர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (27) சிறீலங்கா வான்படை சிப்பாய் ஒருவரும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்டவர் கட்டுநாயக்கா வான்படைத்த தளத்தை சேர்தவர். இவர் தனியார் தொலைக்காட்சி விழா ஒன்றில் பங்குபற்றியதால் அதில் பங்குபற்றியவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, சீதுவ சிறப்பு அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரி ஒருவரும் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவரின் மனைவி வெலிசர கடற்படைத் தளத்தில் பணியாற்றி வருவதுடன். தற்போது மகப்பேறு விடுமுறையில் உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.