சிறீலங்காவில் எலிக்காச்சல் எச்சரிக்கை

சிறீலங்காவில் எலிக் காச்சல் பரவும் சாத்தியங்கள் உள்ளதால் நெல் வயல்களுக்கு அருகில் வசிக்கும் மக்கள்  100 மில்லிகிராம் டொக்சிசைக்கிலின்  (Doxycycline)  எனப்படும் மருந்தின் இரண்டு குளிசைகளை தினமும் பயன்படுத்துமாறு சிறீலங்கா தொற்றுநோய் தடுப்பு பிரிவின் அதிகாரி வைத்தியர் சுடத் சமரவீரா தெரிவித்துள்ளார்.

கடந்த 4 மாதங்களில் 500 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 9 பேர் இறந்துள்ளனர். எலிகளின் சிறுநீர் நெல் வயல்களில் அல்லது ஆறுகளில் உள்ள நீரில் கலப்பதால் இந்த நோய் ஏற்படுகின்றது. விரைவாக நோய் கண்டறியப்பட்டால் இலகுவில் குணப்படுத்த முடியும். களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி, அனுராதபுரம், பொலநறுவை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

எனவே இந்த இடங்களில் உள்ள வயல்கள் மற்றும் நீர் நிலைகளில் இறங்குவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.