சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் கோத்தபயா தோல்வியடைவார் – இந்திய புலனாய்வு அமைப்பு தகவல்

இந்திய புலனாய்வு அமைப்பான றோ மற்றும் இலங்கைப் புலனாய்வு அமைப்புகள் நடத்திய கருத்துக் கணிப்பில் சிறிலங்காவில் அடுத்த ஜனாதிபதியாக சஜித் பிரேமதாசாவே வருவதற்கான சாத்தியம் உள்ளதாக அறிவித்துள்ளது.

சஜித் பிரேமதாசா கோத்தபயா ராஜபக்ஸவை விட 2 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிப்பதாகவும் குறிப்பிட்டுள்ள இந்த அமைப்புகள், காலி, களுத்துறை, கம்பகா, அம்பாந்தோட்டை, மொனராகல, குருநாகல், கேகாலை, இரத்தினபுரி உட்பட 13 மாவட்டங்களிலேயே கோத்தபயா முன்னிலை வகிக்கின்றார். இருந்தாலும் சஜித்தின் வெற்றி கருத்துக் கணிப்பின்படி உறுதியாக வாய்ப்பு உள்ளது.

கோத்தபயா முன்னிலையில் இருக்கும் 4 மாவட்டங்களில் சஜித் பின்னடைவை சந்தித்தாலும், இறுதி நேரம் முடிவுகள் மாறலாம் எனவும் கணிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள அமைப்பு ஒன்றின் மூலம் இந்திய றோ அமைப்பு இந்த தகவல்களை திரட்டியுள்ளது.