சிறிலங்காவின் 16 பேர் கொண்ட புதிய அமைச்சரவை

இன்று (22) சிறிலங்காவின் புதிய அமைச்சரவை உறுதிப்பிரமணம் எடுத்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விபரம் வெளியிட்டது.புதிய அமைச்சர்கள் இன்று (22) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

அவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு.

1. கௌரவ மஹிந்த ராஜபக்ஷ – நிதி, பொருளாதார அலுவல்கள், கொள்கை அபிவிருத்தி, புத்த சாசனம், கலாசாரம், நீர் வழங்கல் மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு வசதிகள் அமைச்சர்

2. கௌரவ நிமல் சிறிபால டி சில்வா – நீதி, மனித உரிமை மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர்

3. கௌரவ ஆறுமுகன் தொண்டமான் – தோட்ட உட்கட்டமைப்பு, சமூக வலுவூட்டல் அமைச்சர்

4. கௌரவ தினேஷ் குணவர்தன – வெளிநாட்டு உறவுகள், திறன் அபிவிருத்தி, தொழிற்துறை மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர்

5. கௌரவ டக்ளஸ் தேவானந்த – மீன்பிடி, நீரியல் வள அமைச்சர்

6. கௌரவ பவித்ராதேவி வன்னியாரச்சி – மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள், சமூக பாதுகாப்பு, சுகாதார, சுதேச மருத்துவத்துறை அமைச்சர்

7. கௌரவ பந்துல குணவர்தன – தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர்

8. கௌரவ ஜனக்க பண்டார தென்னகோன் – பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர்

9. கௌரவ சமல் ராஜபக்ஷ – மகாவலி அபிவிருத்தி, விவசாயம், நீர்ப்பாசனம், கிராமிய பொருளாதார அபிவிருத்தி, உள்ளக வர்த்தக, உணவுப் பாதுகாப்பு, நுகர்வோர் நலன்கள் அமைச்சர்

10. கௌரவ டளஸ் அழகப்பெரும – கல்வி, விளையாட்டுத்துறை, இளைஞர் அலுவல்கள் அமைச்சர்

11. கௌரவ ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ – வீதி, பெருந்தெருக்கள் துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர்

12. கௌரவ விமல் வீரவன்ச – சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறை, தொழில் முயற்சி அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சர்

13. கௌரவ மஹிந்த அமரவீர – பயணிகள் போக்குவரத்து, மின்சக்தி, சக்திவலு அமைச்சர்

14. கௌரவ எஸ்.எம்.சந்திரசேன- சுற்றாடல், வனஜீவராசிகள், காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர்

15. கௌரவ ரமேஷ் பத்திரன – பெருந்தோட்டத் துறை, ஏற்றுமதி விவசாயம் அமைச்சர்

16. கௌரவ பிரசன்ன ரணதுங்க – கைத்தொழில் ஏற்றுமதி, முதலீட்டு ஊக்குவிப்பு, சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர்