சிறிலங்காவின் பாதுகாப்பு பதில் அமைச்சராக ருவன் விஜேவர்த்தன

சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சரான மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ விஜயமாக சீனா சென்றுள்ளதால், பாதுகாப்பு பதில் அமைச்சராக ருவன் விஜேவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 21ஆம் திகதி தற்கொலைத் தாக்குதல்கள் நடைபெற்ற வேளை அதிபர் மைத்திரிபால சிறிசேன சிங்கப்பூர் சென்றிருந்தார். அவ்வேளையில் பாதுகாப்பு பதில் அமைச்சுப் பதவிக்கு எவரும் நியமிக்கப்படவில்லை. இது நாட்டில் பல பிரச்சினைகளை தோற்றுவித்தது.

இவ்வேளையில் பாதுகாப்பு தொடர்பாக உரிய தீர்மானங்களை எடுக்க முடியவில்லை என எதிர்த் தரப்பினர் குற்றம் சுமத்தியிருந்தனர்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ வெளிநாடு செல்லும் போது, பாதுகாப்பு பதில் அமைச்சராக மைத்திரிபால சிறிசேனவை நியமிப்பார்.

ஆனால் 2015 ஆட்சி மாற்றத்தின் பின்னர் கடந்த ஏப்ரல் 21 வரை பாதுகாப்பு அமைச்சரான மைத்திரிபால சிறிசேன வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் போது, பாதுகாப்பு பதில் அமைச்சராக எவரையும் நியமிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.