சவால்களை எதிர்நோக்கும் தாயக மக்களும் இனஅழிப்புகெதிரான சர்வதேச போராட்டமும்!

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இறுதிக் கட்டப் போரில்காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் மக்களையும், சரணடைந்த போராளிகளையும் விடுதலை செய்யக் கோரி அவர்களது குடும்பத்தாரும், உறவினர்களும், மனித உரிமைஆர்வலர்களும் போராடி வருகிற சூழலில் இலங்கை அதிபரின்அறிவிப்பு உறவினர் மற்றும் நீதிக்காகப் போராடுவோர் உள்ளங்களில் இடியென இறங்கியிருக்கிறது. இறுதிக் கட்டப்போரில் காணாமல் போனவர்களின் நிலை குறித்தறிய ஐ.நா.பெருமன்றம்வரை சென்று தமிழ்ச்சமூகம் போராடி வருகிறநிலையில், இதுகுறித்து வாய் திறக்காது கள்ளமௌனம்சாதித்து வந்த இலங்கை இனவாத அரசு, தற்போது அவர்கள்இறந்துவிட்டதாக அறிவித்திருப்பதன் மூலம் ஈழத்தில் தாங்கள் நடத்திய இனப்படுகொலையை மீண்டுமொருமுறைஒப்புக் கொண்டிருக்கிறது.

சிறிலங்காவில் நீதிக்காகப் போராடுபவர்கள்,ஊடகவியலாளர்கள், பாதிக்கப்பட்ட உறவினர்கள் எந்தவிதஎதிர்ப்பு தெரிவித்தாலும் நசுக்கப்படும் தற்போதைய நிலைமைஎதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் முடிந்த பின்பு மோசமானநிலைக்கு செல்லும். எம் மக்கள்கண்காணிப்புக்குட்படுத்தப்பட்டு பெரும் பாதிப்புக்குஉள்ளாக்காப்படுவார்கள். போராடும் மக்களை அச்சுறுத்திசெயல் இழக்கச் செய்வதுடன் குற்றவியல் நீதி விசாரணைக்குதேவைப்படும் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்படும்.எனவே இலங்கைக்கான சர்வதேச நீதி பொறிமுறைஉருவாக்கப்பட்டு குற்றவியல் நீதி விசாரணை செயல்படத்தொடங்கினாலும் கூட பூரணமான சாட்சியங்கள் மற்றும்ஆதாரங்கள் இன்றி நீதியை வெளிக் கொண்டு வருவதுஅசாத்தியமாக்கப்படும்.

மேற்கண்ட விடயங்கள் மூலம் தமிழர்களால் தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டுகின்ற சர்வதேச நீதி விசாரணைப் பொறிமுறைக்கான வழித்தடங்களை ஆராய்ந்து பிரித்தானியதமிழர் பேரவை (BTF ) மற்றும் புலம்பெயர் சகோதர அமைப்புகள் தொடர்ந்தும் வலியுறுத்தி கொண்டிருக்கும் இவ்வேளையில் சரணடைந்தவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டனர் என்ற சிறிலங்காஜனாதிபதியின் கூற்றானது தமிழர்களுக்கு வழங்க வேண்டிய நீதி சிறிலங்காவிடமிருந்து வரப் போவது இல்லை என்பதனைஉலக நாடுகளுக்கு எடுத்து சென்று நீதிக்கானமுன்னெடுப்புகளை வலுப்படுத்த வேண்டியது தமிழ் மக்களின்கடமை.

அந்த வகையில் பிரித்தானிய தமிழர் பேரவையினரால்முன்னெடுத்துச் செல்லப்படுள்ள வேலைத் திட்டங்கள்:

1) பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சு மற்றும்பிரித்தானியாவில் முடிவெடுக்கும் அதிகார மட்டங்கள்என்பனவற்றோடு தொடர் சந்திப்புகள் நடைபெறுகின்றன.

2) அமெரிக்க வெளிவிவகார அமைச்சுடன் USTPAC, BTF, CTCஅமைப்புகளின் பிரதிநிதிகளின் சந்திப்பு இடம்பெற்றதுடன்காத்திரமான நடவடிக்கைகளை பட்டியலிட்டு உடனடி மற்றும்எதிர்கால நகர்வுகளை திட்டமிட்டு மேற்கொள்ளுமாறுகோரிக்கை விடப்பட்டது.

3) தென் ஆப்பிரிக்காவின் வெளிவிவகார அமைச்சில் தமிழ்மக்களின் நீதிக் கோரிக்கை மற்றும் அரசியல் அபிலாசைகளைஅடையும் வழிவகைகைகள் குறித்து ஆராயப்பட்டது.

4) இந்திய வெளிவிவகார அதிகாரிகள் மட்ட சந்திப்புகள்இடம்பெற்றதுடன் தமிழ்மக்களுக்கான ஆதரவு நிலையில் உள்ளவர்கள் உடனான சந்திப்புகள் மற்றும் கருத்துக்பரிமாற்றங்கள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன. தமிழ்மக்களுக்கான நீதி சம்பந்தமாக இந்தியாவின் ஆதரவு கோரப்பட்டதுடன் சிறிலங்கா அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் அழுத்தங்களை பிரயோகிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுஉள்ளது.

5) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரின் மார்ச் மாத அறிக்கை வெளியிடப்பட உள்ளநிலையில் தமிழ் மக்கள் கோரும் முக்கியமான அம்சங்களைஉள்ளடக்குமாறு ATC, BTF, CTC மற்றும் USTPAC இணைந்ததகவல் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

6) ஐரோப்பிய நாடுகளின் ராஜதந்திரிகளுடன் தகவல்பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

7) மனித உரிமை தொடர்பான கருத்துருவாக்கங்களைமேற்கொண்டு சர்வதேச தளங்களை தயார்படுத்தும் சர்வதேசஅரச சார்பற்ற நிறுவனங்களை (INGO) சந்தித்து அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும்சிறிலங்காவின் தற்போதைய அரசு எடுக்கக் கூடிய எதிர்வினைகள் என்பன ஆராயப்பட்டதுடன் சிறிலங்கா அரசிற்கெதிரான புதிய முன்னெடுப்புகளை பிரேரிக்குமாறு வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

வழமைபோன்று ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் போர்க் குற்றங்கள்மற்றும் இன அழிப்பை புரிந்து கொண்டுள்ள அனைத்துக்கட்சிகளையும் சேர்ந்த பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விபரங்கள் கொடுக்கப்பட்டு எதிர்வரும் கூட்டத்தொடரில் கலந்து கொள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.

மதிநுட்பமும் செயல்திறமையும் அர்ப்பணிப்பும் உள்ளவர்கள்மேலும் இப் பெரும் பணியில் இணைந்து கொள்ளுமாறு பிரித்தானிய தமிழர் பேரவை அன்புடன் வேண்டிக் கொள்கின்றது.