சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் மாநாட்டின் நோக்கம் குறித்து மட்டக் களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக் கப்பட்டோர் சங்கத் தலைவி மற்றும் வடக்கு-கிழக்கு மாவட்டங்களின் உப தலைவி அமலராஜ் அமலநாயகி இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய கருத்துக்கள்.
கேள்வி:
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம் என்ன?
2009, மே,18, ல் முள்ளிவாய்க்காலில் போர் மௌனித்த பின்னர் இனப்படுகொலைக்காகவும், வலிந்து காணாமல் ஆக் கப்பட்டவர்கள் தொடர்பாகவும் சர்வதேச நீதியையே வடகிழக்கில் உள்ள அனைத்து தமிழ்தேசிய கட்சிகள், சிவில் அமைப்புகள் வலியுறுத்திவந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் வடக்கு–கிழக்கு எட்டு மாவட்டங்களையும் இணைத்து, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்காக தொடர்ச்சியான போராட்டங்களை முன் னெடுத்து வருகின்றோம். ஆரம்பத்திலிருந்தே சர்வதேச நீதிப் பொறிமுறையின் ஊடாகவே எமக்குத் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு அதனையே வலி யுறுத்தி வருகின்றோம்.
இலங்கை அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் மற்றும் முன்னெடுக்கப்பட்ட விசா ரணைகள் தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நம்பிக்கை இல்லை. பல ஆண்டுகளாக முறைப்பாடுகளைச் செய்தும், பல்வேறு இடங்களில் தேடியும், எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது குறித்து இதுவரை தெளிவான பதில் கிடைக்கவில்லை. நேரடியாக படையினரிடம் ஒப்படைத்த எமது உறவுகளுக்கும் என்ன நடந்தது என்பதை இலங்கை அரசுகள் இதுவரை கூறவில்லை.
கேள்வி:
உங்களுடைய தனிப்பட்ட அனுபவம் என்ன?
எனது கணவர் 2009ஆம் ஆண்டு பெப்ரவரி 19ஆம் திகதி மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் உள்ள மரப்பாலம் முகாமில் வைத்து பாதுகாப்புப் படையினரால் அழைத்துச் செல்லப்பட்டார். இதனை நேரில் கண்ட சாட்சிகளும் உள்ளனர். அன்றிலிருந்து அவரைத் தேடி பல்வேறு இடங்க ளில் முறைப்பாடுகளைச் செய்துள்ளேன்.
“அவர் ஏதேனும் குற்றம் செய்திருந்தால், அவர் எங்கு இருக்கிறார் என்பதைத் தெரிவியுங்கள்” என்றுதான் நான் தொடர்ந்து கேட்டு வருகின்றேன். என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இதே நிலையில்தான் உள்ளன.
கேள்வி:
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம் (OMP) மீதும் நம்பிக்கை இல்லையா?
ஆரம்பத்தில் OMP ஊடாக எமது உறவுகளின் நிலையை அறிய முயற்சிக்குமாறு எமக்கு அறிவுறுத் தப்பட்டது. அதன்படி, ஐந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் வழக்குகள் தொடர்பான சாட்சிகளையும் ஆவணங்களையும் OMP-யிடம் வழங்கினோம்.
குறிப்பிட்ட காலத்துக்குள் குறைந்தது ஒருவருக்கு என்ன நடந்தது என்பதைத் தெரிவிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடனேயே அவற்றை வழங்கினோம். ஆனால், பல ஆண்டுகளுக்குப் பின்னரும் அந்த வழக்குகள் தொடர்பில் உரிய பதில் கிடைக்கவில்லை. இதுபோன்ற அனுபவங்கள்தான் OMP மீதான எமது நம்பிக்கையை இழக்கச் செய்தன.
சுருக்கமாக கூறினால் இந்த அலுவலகம் பாதிக் கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான உதவிகளையும் நிவாரணங்களையும் வழங்குதல். காணாமல் போன மைக்கான சான்றிதழ்கள் அல்லது இறப்புச் சான்றிதழ்களை வழங்குவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தல்.
நாங்கள் நிவாரணமோ, நட்ட ஈடோ,இறப்பு சான்றி தழோ கேட்கவில்லை எமக்கு காணாமல் ஆக்கப்பட்டதற்கு யார் பொறுப்பு அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை கூறவேண்டும் அதற்கான சர்வதேச நீதியே தேவை OMP அலுவலகம்மீது எமக்கு நம்பிக்கை இல்லை.
கேள்வி:
இந்த மாநாட்டின் மூலம் சர்வதேச சமூகத்திடம் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன?
பல ஆண்டுகளாக இலங்கை அரசாங்கத்திடம் எமது கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றோம். முறைப் பாடுகள் செய்துள்ளோம்; போராட்டங்களை நடத்தியுள் ளோம். ஆனால், உரிய பதில் கிடைக்கவில்லை.
எனவே, இந்த மாநாட்டுக்கு சர்வதேச பிரதி நிதிகளை அழைத்து, எமது அனுபவங்கள், சாட்சிகள் மற்றும் ஆவணங்களை அவர்களிடம் முன்வைக்க உள்ளோம். இதுவரை இலங்கை அரசாங்கத்திடம் மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை என்பதையும் தெளிவு படுத்த உள்ளோம். அதுமூலமாக சர்வதேத்தைக்கு இந்த மாநாடுமூலமாக அழுத்தம் கொடுக்கலாம் என்ற நம்பிக்கை எமக்குண்டு.
கேள்வி:
மாநாட்டில் வேறு என்ன நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன?
பல ஆண்டுகளாக எமது அமைப்பு வெளியிட்ட அறிக்கைகள், ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கிய பரிந்து ரைகள் மற்றும் போராட்டங்களின் பதிவுகள் ஆகியவற்றைத் தொகுத்து நூலாக வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்.
மேலும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடியபோது உயிரிழந்த ஏறக்குறைந 600-க்கும் மேற் பட்ட தாய்மார்களின் சாட்சியங்களையும் தொகுத்து வெளியிடவுள்ளோம். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பயன் படுத்திய பொருட்களை வைத்து கண்காட்சியும் நடத்தப் படவுள்ளது.
கேள்வி:
புலம்பெயர் தமிழ் சமூகத்திடம் உங்கள் எதிர்பார்ப்பு என்ன?
புலம்பெயர் தமிழ் சமூகம் எமது போராட்டத்திற்கு ஆதரவாகச் செயற்பட வேண்டும். எமது ஆவணங்கள் மற்றும் அறிக்கைகளை அவர்கள் வாழும் நாடுகளில் வெளியிட்டு, சர்வதேச சமூகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.
இந்த மாநாட்டுக்கும் ஆவணப்படுத்தல் பணி களுக்கும் நிதி உதவி தேவைப்படுகிறது. ஆய்வுகள் மேற் கொண்டு, தங்களிடம் உள்ள தகவல்களையும் எம்முடன் பகிர வேண்டும். தொடர்ச்சியாக சர்வதேச நீதிக்காக அழுத்தங் களை வழங்கவேண்டும். எனவே, சர்வதேச சமூகம் இந்த விடயத்தில் முழுமையாகத் தலையிட்டு, உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்யக்கூடிய சர்வதேச நீதிப் பொறிமுறையை உருவாக்க வேண்டும். எமது உறவுக ளுக்கு என்ன நடந்தது என்பது தெரியவரும் வரை, இந்தப் போராட்டம் தொடரும்.



