சமஷ்டி முறையின் ஊடாகவே மலையக மக்களின் இருப்பை பாதுகாக்க முடியும்- செ.கஜேந்திரன்

“சமஷ்டி முறை வருகின்றபோதே மலையக மக்களின் இருப்பும் பாதுகாக்கப்படும். ஆகவேதான் அதற்காக நாம் தொடர்ந்து போராடி வருகின்றோம்” என செல்வராசா கஜேந்திரன் தெரவித்துள்ளார்.

மஸ்கெலியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த செல்வராசா கஜேந்திரன், அங்கு ஊடகவியலாளர்களை சந்தித்தப்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்

இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“நாட்டில் ஒற்றையாட்சி முறையை ஒழிக்கப்பட்டு, சமஷ்டி முறையை உருவாக்கும்  அரசியலமைப்பு கொண்டு வரப்பட வேண்டும்.

அப்போதுதான் மலையக மக்களின் இருப்பும் கூட பாதுகாக்கப்படும். மலையக மக்களுடனும் இணைந்து பயணிப்பதற்கும் தயாராக இருக்கின்றோம்.

மேலும் தற்போதைய அரசாங்கம், சீனாவின் முகவர்களாக செயற்பட்டு, நாட்டின் வளங்களை விற்று சீனாவின் செல்வாக்கினை உயர்த்தும் வகையில் செயற்படுகின்றது.

இந்த அரசாங்கத்துக்கு நாட்டு மக்களின் நலன்களில் அக்கறை கிடையாது” என அவர் குற்றம் சுமத்தினார்.