கோவிஷீல்ட் தடுப்பு மருந்தின் 3ம் கட்ட பரிசோதனை நிறைவு – சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா

இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட கிளினிக்கல் பரிசோதனை நிறைவடைந்துள்ளதாக சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது மேலும் 4 கோடி டோஸ் மருந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனமான ஆஸ்ட்ராசெனிகா ஆகியவை இணைந்து உருவாக்கிய கோவிஷீல்ட் தடுப்பு மருந்தை இந்தியாவில் சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா தயாரித்து வருகிறது.

இந்நிலையில் கோவிஷீல்ட் தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை நிறைவடைந்துவிட்டதாக ஐசிஎம்ஆர் மற்றும் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

இந்த தடுப்பு மருந்து தற்போது பெரிய அளவில், பிரிட்டன், பிரேசில், தென் ஆப்ரிக்கா மற்றும் அமெரிக்காவிலும் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

“இந்த பரிசோதனை முடிவுகளில் கிடைக்கப்படும் நம்பகமான முடிவுகள் இந்த தடுப்பு மருந்து கொரோனா தொற்றுக்கான தீர்வாக இருக்கலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இதுவரை இந்தியாவில் மனிதர்களிடத்தில் பரிசோதிக்கப்பட்டதில் கோவிஷீல்ட் மிக நவீனமானது.” என சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

நன்றி பிபிசி