கோவிட்-19 தொடர்பில் வெளிநாட்டு நிதி கிடைக்கவில்லை

தற்போது நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் நெருக்கடியை எதிர்கொள்வதற்கு தேவயான நிதி எதுவும் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கவில்லை என சிறீலங்கா பிரதமர் மகிந்தா ராஜபக்சா இன்று (4) இடம்பெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் பேசும் போது தெரிவித்துள்ளார்.

எனினும் நிதி தொடர்பான தகவல்களை தெரிவிக்குமாறு அவர் நிதி அமைச்சின் செயலாளர் எஸ் ஆர் ஆட்டிகலாவை கேட்டுக்கொண்டார்.

உலக வங்கி 127 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு சம்மதித்துள்ளது. இந்த நிதி கொரோனா நோய்க்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பயன்படும் என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தமது கோரிக்கைகள் மற்றும் திட்டங்களை தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் மகிந்தாவிடம் கையளித்திருந்தார்.
தமது எதிர்கால நடவடிக்கைகளின் போது இந்த கோரிக்கைகள் கருத்தில் எடுக்கப்படும் என மகிந்த தெரிவித்துள்ளார்.

பி.சி.ஆர் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு உதவியாக தமது ஒரு மாத சம்பளத்தை வழங்கவுள்ளதாகவம் தெரிவித்துள்ளனர்.