கோத்தாவைச் சந்திக்க கூட்டமைப்பால் முடியவில்லை: அம்பலப்படுத்தும் ஆனந்தன்

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஜனாதிபதி கோத்தாபயவைச் சந்திக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த முயற்சிகள் கைகூடவில்லை என்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

தற்போதைய காலகட்டத்தில் தமிழ்மக்களின் அரசியல் எதிர்காலம் உட்பட பல்வேறு பிரச்சினைகளைக் கையாள்வது தொடர்பாக வவுனியா மாவட்ட பொது அமைப்பினர் மற்றும் புத்திஜீவிகளுடனான சந்திப்பு வவுனியா ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்றது. அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:

“கடந்த ஆட்சிக்காலத்தில் எமக்கு கிடைத்த சந்தர்ப்பங்கள் தமிழ்த் தலைமைகளின் நிபந்தனையற்ற ஆதரவின் மூலம் நீர்த்துப்போகச் செய்யப்பட்டுள் என. இதன் மூலம் எதிர்வரும் காலங்களில் தமிழ் மக்களின் அரசியல் உட்பட ஏனைய விடயங்களைக் கையாள்வதற்கு மாற்று வழி காணவேண்டிய நிலைமைக்குத் தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை, புதிய ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு தமிழ்க் கூட்டமைப்பு பல தடவைகள் முயற்சி எடுத்துள் ளது. அந்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை . அதற் கும் அப்பால் அரசுடன் பேசுவதற்கு இராஜதந்திர மட் டங்களோடும் அவர்கள் பேசியிருக்கிறார்கள். அந்த முயற்சிகளும் கைகூடவில்லை. கூட்டமைப்பின் இரா ஜதந்திர தோல்வியின் காரணமாக மாற்று வழி ஒன்றைக் கண்டுபிடிக்க வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது.

மாற்று அரசியல் தலைமை ஒன்று தேவை என்பதை இங்கிருக்கும் எல்லோரும் வலியுறுத்தியிருக்கிறார்கள். அதை நோக்கி நாம் செல்வதனூடாகத்தான் எமது சகல விதமான பிரச்சினைகளையும் அரசுடனும், இராஜதந் திர மட்டங்களுடனும் கையாளக்கூடிய வழிமுறையை ஏற்படுத்தமுடியும். என்றார்.

“தனி நாட்டுக்குப் போராடிய தமிழ் மக்கள் இன்று வாழ் வாதாரத்துக்காகப் போராட வேண்டிய நிலைக்குத் தள் ளப்பட்டுள்ளனர்” என்று சந்திப்பில் கலந்துகொண்டிருந்தவர்கள் பலர் கவலை தெரிவித்தனர். தமிழ் மக் களின் எதிர்கால அரசியல். பாதுகாப்பு, போரால் பாதிக்கப்பட்ட மக்களின் அபிவிருத்திகள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் சந்திப்பில் ஆராயப்பட்டன என ஆனந்தன் மேலும் தெரிவித்தார்.