இரணைமடுத் திட்டம் மீண்டும் இழுபறியில்; ஒருங்கிணைப்புக் குழுவில் முடிவில்லை

கிளிநொச்சி இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு நீர்கொண்டு வருவது தொடர்பில் மீண்டும் அதிகாரிகளிடையே சலசலப்பு ஏற்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்றது. அதில் நீர் வழங்கல் வடிகால மைப்புச் சபை சார்பான விடயங்கள் ஆராயப் பட்டன. ‘குடாநாட்டுநீர்வழங்கலுக்காக இரணை மடுக் குளம் 2 அடி உயர்த்தப்பட்டது. இருப்பினும் அதன் பின்னர் ஏற்பட்ட அரசியல் கருத்துக் கள், மாகாணசபை மேற்கொள்ளாத தீர்மானத்தை மேற்கொண்டதாக ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு அறிக்கையிட்டமை போன்ற காரணங்களால் அதில் பல மாற்றம் ஏற்படுத்தப்பட்டு திட்டம் இடம் பெற்றது. தற்போது அந்த மாவட்ட மக்களுக்கு உண்மை நிலைமை புரிய வைக்கப்பட்டுள்ளது’ என்று அதன் பொறியியலாளர் தெரிவித்தார்.

‘இரணைமடுவில் இருந்து ஆரம்பத்தில் 12 எம். சி.எல் நீரே நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை கோரியது. இருப்பினும் அதன் பின்னர் 18 எம். சி.எல் நீர் வேண்டும் என்று கோரப்பட்டது. கேட்ட அளவான நீரை வடமராட்சியால் இருந்து எம்மால் வழங்க முடியும். இதேபோன்று பாலியாறுத் திட்டம் அனுமதிக்கும் நிலமையை எட்டியுள்ளது. அதில் குறைந்த பட்சம் 12 எம்.சி.எல் நீர் கிடைக்கும்.

அதேபோன்று குடாநாட்டில் இருந் தும் 7 எம்.சி எல் நீரை பெற முடியும்’ என்று நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரி தெரிவித் தார். வடமராட்சி நீரைப் பெற இன்னமும் 2 ஆண்டுகளுக்கு மேல் காலம் தேவை என்று நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர் தெரி வித்த போது. இல்லை அது தவறானது அதற்குரிய இயந்திரங்கள் நெதர்லாந்து அரசினால் அன்பளிப்பாக கிடைக்கின்றன. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சார்ந்தவர்களை இணைத்து நடத்தும் கூட்டமொன்றில் இதற்குரிய முடிவு எடுக்கப்படும் என்று கூட்டத் தில் தெரிவிக்கப்பட்டது.