கோத்தாவுக்கு எதிரான சாட்சியங்களை சேகரித்த காவல்துறை அதிகாரி இடமாற்றம்

சிறீலங்காவின் குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரியான சனி அபயசேகரா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த இடமாற்றத்திற்கான வேண்டுகோளை சிறீலங்கா காவல்துறை மா அதிபர் சந்தான விக்கிரமரத்னா விடுத்திருந்தார்.

இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரி மகிந்தா ராஜபக்சா அரசு மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் கோத்தபயா ராஜபக்சாவுக்கு எதிரான சாட்சியங்களை சேகரித்தவராவார்.

அவர் விசாரணை மேற்கொண்ட வழக்கு விபரங்கள் வருமாறு:

  • சிறீலங்கா கடற்படையினரால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 11 தமிழ் இளைஞர்கள் தொடர்பான விசாரணை
  • ஊடகவியலாளர் லசந்த விக்கிரமசிங்கா படுகொலை
  • ஊடகவியலாளர் பிரகீத் எக்நலிகொட கடத்தல் விவகாரம்
  • தயூடீன் படுகொலை
  • மத்தியவங்கியில் இடம்பெற்ற ஊழல்
  • ஏப்பிரலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு
  • கோத்தபாயாவின் அமெரிக்க குடியுரிமை விவகாரம்
  • உபாலி கெயித் மீதான தாக்குதல்
  • வைத்தியர் சாபி வழக்கு.