கோத்தபயாவிற்கு ஆதரவு வழங்க அமெரிக்காவிலிருந்து படையெடுக்கும் சிங்களவர்கள்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் களமிறங்கியிருக்கும் கோத்தபயா ராஜபக்ஸவிற்கு ஆதரவாக பிரசாரப் பணிகளில் ஈடுபட அமெரிக்காவில் இருந்து 850 இலங்கையர்களும், இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களும் கொழும்பிற்கு வரவுள்ளனர்.

கோத்தபயா ராஜபக்ஸவிற்கு வாக்களிப்பதற்காகவும், அவருக்கு ஆதரவான பரப்புரையில் ஈடுபடுவதற்காகவும், குறைந்தது 850 பேர் கொழும்பு வருவதற்கு விமானங்களில் ஆசனங்களைப் பதிவு செய்துள்ளதாக, அவர்களுக்கான பயணச்சீட்டுக்களை விற்பனை செய்த பயண முகவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

இவர்களில் பெரும்பாலானவர்கள், லொஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட அமெரிக்காவின் கிழக்குக் கரையோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிராந்திய மற்றும் உலக வல்லரசுகளின் போட்டிக்களமாகியுள்ள சிறீலங்கா அரச தலைவர் தேர்தலில் அவர்களுக்கு ஆதரவாக சிறீலங்கா மக்களில் பல பிரிவினர் செயற்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.