கோத­பாய ராஜ­பக்ஷ நாட்­டிற்கு பொருத்­த­மில்­லாத ஒரு வேட்­பாளர்- தம்­பர அமில தேரர்

பொது­ஜன பெர­முன ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத­பாய ராஜ­பக் ஷ நாட்­டிற்கு பொருத்­த­மில்­லாத ஒரு வேட்­பாளர்,  தான் கலந்து கொள்ளும் கூட்­டங்­களில் நாட்டின் அபி­வி­ருத்தி பற்றி எவ்­வித கருத்­து­க­ளையும், உரை­க­ளையும் முன்­வைக்க முடி­யாத ஒரு கேள்­விக்கு சுயா­தீன பதில் அளிக்க முடி­யாத ஒரு வேட்­பாளர் நாட்­டிற்கு எவ்­வி­தத்தில் பொரு­ளா­தார ரீதியில் அபி­வி­ருத்­தியை எதிர்­கா­லங்­களில் முன்­னெ­டுப்பார் என்­பது சந்­தே­கத்­திற்­கு­ரி­யது.

மக்­களின் பெறு­ம­தி­மிக்க வாக்­கை நாட்­டிற்குத் தேவை இல்­லாத ஜனா­தி­ப­திக்கு வழங்­கா­தீர்கள். தன்­ன­கத்தே பல்­வேறு திற­மை­களைக் கொண்ட ஜனா­தி­ப­தியே நாட்­டுக்குத் தேவை.  அவ­ருக்கே உங்­களின் வாக்­கை வழங்­குங்கள் என்று  தம்­பர அமில தேரர் தெரி­வித்தார்.

அவர்  மேலும் குறிப்­பி­டு­கையில்,

படை­க­ளுக்கு தலைமை தாங்­க­வில்லை, இரா­ணுவத் தள­ப­தியே அனைத்­தையும் தலைமை தாங்­கினார்.  தனக்கு இது குறித்து எதுவும் தெரி­யாது என்று பதில் சொல்­லாமல் தப்­பித்து செல்லும் ஒரு ஜனா­தி­ப­தியை நம்பி எவ்­வாறு நாட்­டை ஒப்­ப­டைப்­பது?  திட­காத்­தி­ர­மான ஜனா­தி­பதி வேட்­பாளர் எனின்   திட­காத்­தி­ர­மாக உரை­யாற்ற வேண்டும். எனக்கு எதுவும் தெரி­யாது தெரி­யாது என்று தப்­பித்துச் செல்ல முற்­படத் தேவை இல்லை. ஐ.தே.க. ஜனா­தி­பதி  வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாச ஒரு நாளைக்கு ஆறு கூட்­டங்­களில் கலந்து கொள்­கிறார். தனது உரை­களை தைரி­ய­மாக  மக்­க­ளுக்கு முன்­வைக்­கிறார், ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கேள்­வி­க­ளுக்கு தயங்­காமல் பதி­ல­ளிக்கக் கூடி­யவர், நாட்டின் நிர்­வாகி என்றால் இவ்­வாறு இருக்க வேண்டும்,

நாட்­டிற்கு தன்னை திற­மை­யான நிர்­வாகி என்று கூறிக்­கொள்ளும் கோத்­த­பாய நாட்டின் நிர்­வாகம் பற்றி மக்­களின் முன்­னி­லையில் தெளி­வூட்ட தைரியம் இல்­லா­த­வ­ரா­கவே இருக்­கிறார், நாட்டின் பிர­ஜா­வு­ரி­மையை முழு­மை­யாகப் பெறாத ஒரு வேட்­பாளர் தனது குடும்ப உறுப்­பி­னர்­க­ளுக்கு அமெ­ரிக்க பிரா­ஜா­வு­ரிமை கொண்ட ஒருவர் நாட்டின் ஜனா­தி­ப­தி­யென்­பது  நாம் அனை­வரும் சிந்­திக்கக் கூடிய விட­ய­மாகும்.

பல­த­ரப்­பட்ட திற­மை­களைக் கொண்ட ஜனா­தி­ப­தியை தெரிவு செய்ய நாட்டு மக்கள் அனை­வரும் ஒன்­றி­ணைய வேண்டும்  என்றார். மேலும் இங்கு உரை­யாற்­றிய பேரா­சி­ரியர் சந்­தி­ர­குப்த தேனு­வர, அமெ­ரிக்­காவின் பிர­ஜா­வு­ரி­மையை நீக்­கி­யமை தொடர்பில் இன்­னமும் கோத்­த­பாய ஆவ­ணங்­களை மக்­க­ளுக்கு முன்­னிலைப் படுத்­த­வில்லை.  தன்­னு­டைய பிரஜாவுரிமை நீக்கப்பட்டுள்ளது என்றால் நாளைய தினம் மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி இலங்கைப் பிரஜைக்கு தங்களின் வாக்கை மக்கள் வழங்க வேண்டும், அமெரிக்க பிரஜைக்கு தங்களின் வாக்கை வழங்க வேண்டாம் என்றும் அவர் இதன் போது தெரிவித்தார்.