கொழும்பு துறைமுகத்தைப் பாதுகாக்க இன்று நாடு தழுவிய போராட்டம் – அநுர அழைப்பு

கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பதற்காக, இன்று நாடு தழுவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று ஜே.வி.பி. கட்சியின் தலைவர் அநுரகுமார திஸநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள அவர், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விற்பனை செய்வதென்பது, கொழும்பு துறைமுகத்தையே விற்பனை செய்வதற்கு ஒப்பான செயலாகும் என்றும் முதலீடு, குத்தகை என்ற போர்வையில், கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்துக்கு தாரை வார்ப்பதற்கே இந்த அரசாங்கம் முயல்வதாகவும் அவர் குற்றங்சாட்டினார்.

நாட்டை ஆளும் அதிகாரத்தை, மக்கள் 5 வருடங்களே இந்த அரசாங்கத்துக்கு வழங்கியுள்னர் என்றும் ஆனால் தாங்கள்தான் நாட்டில் சொந்தக்காரர்கள் என்ற போர்வையில், ஆட்சியாளர்கள் தேசிய வளங்களை வெளிநாடுகளுக்கும், பல்தேசியக் கம்பனிகளுக்கும் விற்பனை செய்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கு இடமளிக்ககூடாது.தேசிய வளங்களை விற்பனை செய்யும் நடவடிக்கையை தோற்கடிக்க வேண்டும். குறிப்பாக, கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இன்று நாடு தழுவிய ரீதியில் போராட்டம் முன்னெடுக்கப்படும். நாட்டை சிக்கும் ஒவ்வொரு பிரஜையும் இதற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்” என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.