கொலைவழக்கில் இருந்து கோத்தா விடுவிப்பு; மனிதவுரிமைக்கு அமெரிக்கா கொடுத்த மற்றுமோர் அடி

படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க  முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளருமான கோத்தாபயவிற்கு எதிராக தாக்கல் செய்திருந்த வழக்கை  அமெரிக்காவின் கலிபோர்னிய நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சண்டேலீடர் ஆசிரியரின் மரணத்திற்கும் கோத்தபாய ராஜபக்சவிற்கும் நெருங்கிய தொடர்புள்ளது என்ற அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவையே நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கோத்தாபய சட்டவிரோத படுகொலைகள் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் சித்திரவதைகள் ஆகியவற்றில் ஈடுபட்டார் என அகிம்சா விக்கிரமதுங்க குற்றம்சாட்டியிருந்தார்.

கோத்தாபய பொதுச்சட்டத்தின்  வெளிநாட்டு அதிகாரிகள் விடுபாட்டுரிமைக்கு தகுதியானவர்  என்ற அடிப்படையில் நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.