கொரோனா வைரஸ் – துன்பத்தில் மலையக மக்கள் 

கடந்த வருடம் புனித ஞாயிறு அன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களால் ஏற்பட்ட பாதிப்புக்களில் இருந்து மலையக மக்களின் தொழில் வாய்ப்புக்கள் வழமைக்கு திரும்பிவரும் நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் அவர்களை மேலும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நுவரேலியாவில் போன்ற பகுதிகளில் வாழும் மக்கள் சுற்றுலாத்துறை, தேயிலை தொழில் போன்ற விவசாயம் ஆகிய தொழில்களை நம்பி வாழ்பவர்கள். ஆனால் கோவிட்-19 அச்சம் சுற்றுலாத்துறையை முற்றாக முடக்கியுள்ளதுடன், சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் ஊரடங்குச் சட்ட நடைமுறைகளும் அவர்களின் அன்றாட தொழில்களை அதிகம் பாதித்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறீலங்கா அரசு உதவிகளையும் வழங்கவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.