கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 4 இலட்சத்தை தாண்டியது

உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் நோயின் தாக்கத்திற்கு இன்று (07) வரையில் 401,543 பேர் பலியாகியுள்ளதுடன், 6,962,467 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 3,402,697 பேர் குணமடைந்துள்ளனர்.

அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் பலியானவர்களின் விபரம் வருமாறு:

அமெரிக்கா 112,076 பேர், பிரித்தானியா 40,465 பேர், பிரேசில் 35,919 பேர், இத்தாலி 33,846 பேர், பிரான்ஸ் 29,142 பேர், ஸ்பெயின் 27,135 பேர், இந்தியா 6,946 பேர் ரஸ்யா 5,725 பேர் பலியாகியுள்ளனர்.