கொரோனாவினால் நாடு திரும்பிய புலம்பெயர்ந்தவர்களுக்கு வேலைக் கிடைக்காத அவலம்

வங்கதேசத்தின் 12 மாவட்டங்களில் புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பு நடத்திய ஆய்வில், கடந்த பிப்ரவரி முதல் ஜூன் 2020 வரை வங்கதேசத்துக்கு திரும்பிய புலம்பெயர்ந்த வங்கதேசிகள் வேலையின்றி தவிப்பதாகத் தெரிய வந்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 1,486 வங்கதேசிகளிடமும் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்த 1,279 வங்கதேசிகளிடமும் நடத்தப்பட்ட ஆய்வு, திட்டமிடப்படாத வகையில் பெரிய அளவில் இடம்பெயர்ந்தவர்கள் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளமை வங்கதேசத்தை பொருளாதார ரீதியில் பாதித்துள்ளததை வெளிப்படுத்தியுள்ளது.

இதில் 29 சதவீதமானோர் கொரோனா சூழல் காரணமாக சம்பந்தப்பட்ட நாடு வெளியேறிக் கோரியதால் வெளியேறியவர்கள் என்றும் 23 சதவீதமானோர் கொரோனா அச்சம் காரணமாக குடும்பத்தினருடன் சேர்ந்திருக்க திரும்பியவர்கள் என்றும் 26 சதவீதமானோர் குடும்பத்தினர் வரக் கோரியதால் திரும்பியவர்கள் என்றும் 9 சதவீதமானோர் சர்வதேச எல்லைகள் மூடப்படுவதால் தாங்கள் தவிக்க நேரிடும் என்ற அச்சத்தால் திரும்பியவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.