கொரோனா வைரஸ் – ஒரு மில்லியன் மக்கள் பாதிப்பு, 50,000 இற்கு மேற்பட்டோர் பலி

உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தி, உலகின் இயக்கத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ள கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரசின் தாக்கத்திற்கு இதுவரையில் 1,002,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 51,500 இற்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 209,000 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று (2) இத்தாலியில் 760 பேர் மரணமடைந்துள்ளனர், அங்கு மொத்தமாக 13,915 பேர் மரணமடைந்துள்ளதுடன், 115,242 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று ஸ்பெயின் அதிக பாதிப்புக்களை சந்தித்துள்ளது. அங்கு 950 பேர் மரணமடைந்துள்ளனர். இதுவரையில் அங்கு 10,003 பேர் பலியாகியுள்ளதுடன், 102,136 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கனடாவில் 127 பேர் பலியாகியுள்ளதுடன், 10,000 இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுவிற்சலாந்தில் 432 பேர் பலியாகியுள்ளதுடன், 18,267 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரித்தானியாவில் இன்று 569 பேர் மரணமடைந்துள்ளனர், அங்கு இதுவரையிவ் 2,921 பேர் மரணமடைந்துள்ளதுடன், 33,718 பாதிக்கப்பட்டுள்ளனர்.

நெதர்லாந்தில் 1,339 பேர் மரணமடைந்துள்ளதுடன், 14,697 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரான்ஸ் இல் இன்று வரை 5,387 பேர் மரணமடைந்துள்ளனர், வயோதிபர் பராமரிப்பு இல்லங்களில் இடம்பெற்ற மரணங்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

துருக்கியில் இன்று வரை 356 பேர் பலியாகியுள்ளதுடன், 18,135 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் 5,600 இற்கு மேற்பட்டவர்கள் மரணமடைந்துள்ளதுடன், 236,000 இற்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.