கையறு நிலையில் மாவை! அடுத்த தலைவர் சுமந்திரனா? சுரேஷ் கேள்வி

தற்போது சம்பந்தன் தேர்தலில் போட்டியிடமாட்டேன் எனக் கூறியுள்ள நிலையில், மாவை சேனாதிராசா கையறு நிலையில் உள்ளபோது, தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்கப்போவது சுமந்திரனா என்பதை மக்கள் தீர்மானிக்கவேண்டும் என ஈ.பி.ஆர்.எல் எவ். கட்சியின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்தார்.

வட மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய இன்னும் பலர் இணைந்து தமிழர் ஐக்கிய முன்னணி என்ற அமைப்பை உருவாக்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

முல்லைத்தீவு -தண்ணீரூற்று பகுதியில் நேற்று கட்சி அலுவலகத்தைத் திறந்து வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்-

“இப்போது தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி, தான் சிங்களமக்களால் தெரிவு செய்யப்பட்டார் என்றும், எனவே அதற்குத்தான் கடமைப்பட்டுள்ளார் என்றும் , ஆகையால் பெரும்பான்மை இனத்தவர்களின் ஆணைகளை அனைவரும் மதிக்க வேண்டும் என்றும் கூறுகின்றார்.

சில வேளைகளில் பெரும்பான்மை இனத்தவர்கள் அவருக்கொரு ஆணையை வழங்கியிருக்கலாம். ஆனால் அதே சமயம் வடக்கு- கிழக்கிலுள்ள மற்றொரு தேசிய இனமான, தமிழ்த் தேசிய இனம் என்பது இன்னுமொரு ஆணையைக் கொடுத்திருக்கின்றது.

எமது இனம், மொழி, நிலம் என்பன காப்பாற்றப்பட வேண்டும், எமக்கான உரிமைகள் கிடைக்கப் பெற வேண்டும், அதிகாரங்கள் பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும், நாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதற்காகவே தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர்.

ஆகவே ஒட்டுமொத்தமாக நாட்டின் ஜனாதிபதி எனச் சொல்லக்கூடிய ஒருவர், வெறுமனே சிங்கள மக்கள் கொடுத்த ஆணையை மாத்திரமல்ல, அவருக்கு எதிராகவே இருந் தாலும் தமிழ் மக்கள் வழங்கிய ஆணையையும் பரிசீலிக்க வேண்டும்.

இந்த நாட்டில் வாழ்கின்ற ஒட்டுமொத்த மக்களுக்குமான ஜனாதிபதியாக அவர் இருந்தால், அவர் இவ்வாறான விடயங்களை நிராகரிக்க முடியாது. ஒவ்வொரு காலகட்டங்களிலும் வருகின்ற அரசுகள், இந்த நாட்டில் இனங்களுக்கிடையில் பிரச்சினை இருக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்கின்றன.

பிரச்சினைகளுக்கான தீர்வுகளுக்காகக் குழுக்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவ்வாறு உருவாக்கப்பட்ட குழுக்களால் ஆவணங்கள் தயாரிக்கப்பட்டாலும், எந்தச் சிங்களத் தலைமைக்கும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான திராணியோ, பக்குவமோ கிடையாது. அதனைப் போட்டு மிதித்து இல்லாமல் செய்கின்ற போக்கைத்தான் நாம் தொடர்ச்சியாகப் பார்க்கக்கூடியதாகவுள்ளது.

தற்போது வந்திருக்கக்கூடிய கோட்டாபயவின் தலைமை என்பது எல்லாவற்றையும் நிராகரித்ததுடன், தற்போது பிரச்சினை என்று எதுவும் கிடையாது எனவும் அபிவிருத்தி செய்தால் போதுமானது என்றும் கூறுகிற” என்றார்.