குருதிஸ் போராளிகளை நடுத்தெருவில் கைவிட்டுச் செல்கின்றது அமெரிக்கா

மத்திய கிழக்கு நாடுகளில் மேற்கொண்டுவரும் படை நடவடிக்கைகளில் இருந்து தனது படையினரை விலக்கிக்கொள்ளப் போவதாக அமெரிக்காவின் அரச தலைவர் டொனால்ட் டிரம்ப் நேற்று (07) தொவித்துள்ளது பல தரப்பினரிடம் அவநம்பிக்கைகனைத் தோற்றுவித்துள்ளது.

அமெரிக்கா தனது கூட்டணி படையினரை இவ்வாறு இடைநடுவில் கைவிட்டுச் செல்வது அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஆதரவுடன் சிரியா எல்லையில் போரிட்டு வந்த குருதிஸ் போராளிகளுக்கு எதிரான படை நடவடிக்கையை துருக்கி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும், அமெரிக்காவின் படை விலகல் அதற்கு மிகவும் இலகுவான வழியை ஏற்படுத்தியுள்ளதாகவும் ருவிட்டர் சமூகவலைத்தளத்தில் பல அரசியல் அவதானிகள் தமது கருத்துக்களை வெளியிட்டுவருவதாக றொய்ட்டர்ஸ்; செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 3 வருடங்களாக இந்த சமரை நான் நிறுத்தி வைத்திருந்தேன். ஆனால் தற்போது நாம் இதில் இருந்து வெளியேறும் நேரம் வந்துவிட்டது. எமக்கு நன்மை உள்ள போரில் தான் நாம் ஈடுபடுவோம் அதில் வெற்றிபெறுவோம். துருக்கி, ஐரோப்பா, சிரியா, ஈரான், ஈராக், ரஸ்யா மற்றும் குருதிஸ் ஆகியவர்கள் தமது நிலைகளைத் தாமே தீர்மானிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் தனது சமூகவலைத்தளத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த முடிவை நான் முதலில் பார்த்தபோது இது முன்னாள் அதிபர் ஓபாமாவின் முடிவு என நினைத்தேன், ஆனால் டிரம்பின் பெயரை பார்த்த பின்னரே அதனை நாம் நம்பினேன் என செனற்றர் லின்சே கிரகாம் தெரிவித்துள்ளார்.

turkey2 குருதிஸ் போராளிகளை நடுத்தெருவில் கைவிட்டுச் செல்கின்றது அமெரிக்கா2011 ஆம் ஆண்டு ஈராக்கில் இருந்த படையினரை வெளியேற்றும் முடிவை பராக் ஒபாமா எடுத்தபோது அங்கு ஒரு வெற்றிடம் உருவாகும், ஐ.எஸ் அமைப்பு வலுப்பெறும், சிரியா அதிபர் பசீர் அல் அசாட் இன் கை ஓங்கும் என்ற கருத்துக்கள் எழுந்திருந்தது. ஆனால் தற்போதைய முடிவு ஈரான் மற்றும் சிரியாவுக்கு மிகவும் அனுகூலமானது.

எனவே நாம் இந்த முடிவை மாற்றுவதற்கான தீர்மானத்தை கொண்டுவர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளுடன் இணைந்து விடுதலைப்புலிகள் இயங்கியிருந்தால் சில நன்மைகளை பெற்றிருக்காலம் என சில அரசியல்வாதிகளும், அவதானிகளும் தெரிவித்து வரும் கருத்துக்களுக்கு அமெரிக்காவின் தற்போதைய நகர்வு நல்லதொரு பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளது என அரசியல் அவதானி ஒருவர் இலக்கு இணையத்திற்கு கருத்து தெரிவித்துள்ளார்.

முற்றுமுழுதாக குருதிஸ் போராளிகளை கைவிட்ட அமெரிக்க வியட்னாம் உட்பட பல நாடுகளில் தன்னை நம்பிநின்ற அமைப்புக்களை கைவிட்டுச் சென்ற வரலாறுகள் உண்டு. எனவே தான் முற்றுமுழுதாக மேற்குலகத்தின் வலைக்குகள் சிக்காது விடுதலைப்புலிகள் போரிட்டனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.