கீழடி அகழாய்வு: 24 மொழிகளில் வெளியிடப்பட்ட தமிழர் வரலாறு

சென்னையில் நடைபெற்று வரும் 43ஆவது புத்தக கண்காட்சியின் ஒரு பகுதியாக “கீழடி – ஈரடி தமிழ் தொன்மங்கள்” என்ற தலைப்பில் தொல்பொருள் கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது.

கீழடி அகழாய்வின்போது கண்டெடுக்கப்பட்ட சுடுமண் குழாய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் மாதிரிகளை தமிழக தொல்பொருள் துறை இங்கு காட்சிப்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, கீழடி அகழாய்வு முடிவுகள் குறித்த அறிக்கையானது தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், இந்தி உள்ளிட்ட 24 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய மொழிகள் மட்டுமல்லாது ஆங்கிலம் இத்தாலிய மொழி, பிரெஞ்சு, போர்ச்சுகீசிய மொழி, மாண்டரின் (சீன மொழி), உருது, ஜப்பானிய மொழி என உலக மொழிகள் பலவற்றிலும் கீழடி ஆய்வறிக்கையை இனிப் படிக்கலாம்.

நன்றி- பிபிசி தமிழ்