காவல்துறையினரின் செயல் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும்-இலங்கை மருத்துவ வல்லுநர்கள் கண்டனம்

கடந்த 09 ஆம் திகதி காலி முகத்திடல் மைதானத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தின் போது  காவல்துறை  அதிகாரிகளின் செயற்பாடுகளை அமைப்பு மாற்றத்திற்கான இலங்கை மருத்துவ வல்லுநர்கள் கண்டித்துள்ளனர்.

மருத்துவ நிபுணர்கள் குழு இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. சில காவல்துறை உத்தியோகத்தர்கள் மனிதாபிமானமற்ற முறையில் கூட்டத்தைக் கையாளுவது சிறுவர்கள் உட்பட எமது குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியும் அரசாங்கமும் உடனடியாக பாரபட்சமற்ற விசாரணையை நடத்தி, இவ்வாறு சட்டவிரோதமான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் நடந்து கொண்ட காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு எதிராகவும், தண்டனையின்றி செயற்படுவதற்கு வகை செய்யும் கட்டளைகளை பிறப்பித்தவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்குமாறும் குழு வலியுறுத்தியுள்ளது.

அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அவர்களின் நடத்தையின் உளவியல் மற்றும் நெறிமுறை அம்சங்கள் குறித்து தெளிவான மற்றும் புதுப்பித்த பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் மருத்துவ வல்லுநர்கள் கடுமையாக பரிந்துரைத்துள்ளனர்.