காணி கையகப்படுத்தலை இலக்குப்படுத்துவதற்காக சட்ட திருத்தம் செய்ய அனுமதி

காணி கையகப்படுத்தல் நடவடிக்கையை இலக்குப்படுத்தும் நோக்கில் அந்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

தற்போது நடைமுறையிலுள்ள காணி கையகப்படுத்தல் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது காலம் வீண்விரயமாவதன் காரணமாக இலகுவான முறைமையொன்றின் ஊடாக காணிகளை கையகப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் குறித்த சட்டத்தில் கீழ் இழப்பீடுகளை செலுத்தக்கூடிய வகையில் அதனை திருத்தம் செய்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கான அடிப்படை சட்டமூலத்தை தயாரிக்கும் நடவடிக்கைகளை பூர்த்தி செய்வதற்காக, அமைச்சரவை கொள்கை ரீதியான அங்கீகாரம் வழங்கப்பட வேண்டுமென சட்டவரைஞர் அறிவித்துள்ளார்.

இதன்படி, விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்பாசன அமைச்சர் முன்வைத்த யோசனையை கருத்திற் கொண்டு குறித்த சட்டமூலத்தை துரிதமாக தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.