காணாமல் போனோரின் உறவுகளுக்கு பதிலளிக்க வேட்பாளர்களின் திட்டம் என்ன?

வடக்கு, கிழக்கில் தினந்­தோறும்  வேத­னை­யு­டனும் தவிப்­பு­டனும் தமது  உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை தெரி­யா­மலும்  போராட்­டங்­களு­டனும்  வாழ்ந்­து­கொண்­டி­ ருக்கும் காணாமல் போன­வர்­களின்   உற­வு­க­ளான பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு பிர­தான வேட்­பா­ளர்கள் எவ்­வா­றான தீர்வை வழங்­கப்­போ­கின்­றார்கள் என்­பது  ஒரு கேள்வி­யாக  எழுந்து நிற்­கின்­றது.  அதா­வது மிக முக்­கி­ய­மாக  மூன்று கட்­சி­க­ளி­லி­ருந்தும்  மூன்று பிர­தான வேட்­பா­ளர்கள் தேர்தல்களத்தில் இறங்­கி­யுள்­ளனர்.  இவர்கள்  மூவரும்  இந்த காணா­மல்­போனோர் விவ­கா­ரத்தில் எவ்­வா­றான தீர்­வுத்­திட்­டத்தை முன்­வைக்கப்­போ­கின்­றனர் என்­பதே  இங்கு மிக முக்­கி­ய­மா­ன­தாக காணப்­ப­டு­கின்­றது. 

ஜனா­தி­பதி தேர்தல்   தொடர்­பான  பிர­சாரப் பணிகள் ஆரம்­ப­மா­கி­யி­ருக்­கின்­றன. பிர­சா­ரங்கள் அனல் பறக்க  தொடங்­கி­யுள்­ளன ஸ்ரீ­லங்கா பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­பக்க்ஷ அநு­ரா­த­பு­ரத்தில் தனது பிர­சாரப் பணியை ஆரம்­பித்­தி­ருக்­கின்றார்.

அதே­போன்று  ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின்  ஜனா­தி­பதி வேட்­பாளர்   சஜித் பிரே­ம­தாச  கொழும்பில்  தனது பிர­சாரப் பணியை ஆரம்­பித்­தி­ருக்­கின்றார். அதே­போன்று மக்கள் விடு­தலை முன்­ன­ணியும்   பிர­சா­ரப்­ப­ணி­களை ஆரம்­பித்­தி­ருக்­கின்­றது.

பிர­தான கட்­சி­களின் வேட்­பா­ளர்­களின் பிர­சாரப் பணிகள்  ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில்  அடுத்­து­வரும்  35 நாட்­களும்   அர­சியல் கட்­சிகள் மற்றும்  வேட்­பா­ளர்கள் பொதுக்­கூட்­டங்­களில் தமது கொள்­கை­க­ளையும் திட்­டங்­க­ளையும்  வெளிப்­ப­டுத்­து­வ­துடன் வாக்­கா­ளர்­களை  கவரும் வகையில் உரை­யாற்­று­வ­தற்கு முயற்­சிப்­பார்கள். அடுத்­து­வரும் 35 தினங்­களும் பிர­சார கால­மாக  மிகவும் பர­ப­ரப்­பாக இருக்­கப்­போ­கின்­றன. தற்­போது மிக நீண்­ட­கா­ல­மாக  இழு­ப­றியில் இருந்து வந்த ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியின் முடிவு  அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

அதன்­படி ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யா­னது  எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் ஸ்ரீ­­லங்கா பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர்  கோத்­த­பாய ராஜ­ப­க்க்ஷவுக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தற்கு தீர்­மா­னித்­தி­ருக்­கி­றது. சுதந்­தி­ரக்­கட்­சியில்  இருந்து  ஒரு­சில உறுப்­பி­னர்கள் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் பக்கம் செல்­வார்கள் என சில ஊகங்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த  நிலை­யிலும் சுதந்­தி­ரக்­கட்­சியின் அனைத்து  உறுப்­பி­னர்­களும் கோத்­த­பாய ராஜ­ப­க்க்ஷ­ வுக்கு முழு­மை­யான ஆத­ரவை வழங்­கு­வ­தற்கு   முன்­வந்­தி­ருக்­கின்­றனர்.  மிக முக்­கி­ய­மாக சுதந்­திரக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் துமிந்த திசா­நா­யக்க அனு­ரா­த­பு­ரத்தில் நடை­பெற்ற  கோத்­த­பா­யவின் முத­லா­வது  பிர­சாரக் கூட்­டத்தில் பங்­கேற்­றி­ருந்தார்.

அதன்­படி  நவம்பர்  13ஆம் திகதி நள்­ளி­ர­வு­வரை  தீவிர பிர­சார  செயற்­பா­டுகள்  நாடு­மு­ழு­வதும் இடம்­பெறும்.  எனவே  வேட்­பா­ளர்­க­ளுக்கு இடை­யி­லான சொற்­போரை அடுத்த ஒரு மாதத்­துக்கு பார்க்க  முடியும்.

gota crowd 1 காணாமல் போனோரின் உறவுகளுக்கு பதிலளிக்க வேட்பாளர்களின் திட்டம் என்ன?இவ்­வா­றான பின்­ன­ணியில் வடக்கு, கிழக்கில் தினந்­தோறும்  வேத­னை­யு­டனும் தவிப்­பு­டனும் தமது  உற­வு­க­ளுக்கு  என்ன நடந்­தது என்­பதை தெரி­யா­மலும்  போராட்­டங்­க­ளு­டனும்  வாழ்ந்­து­கொண்­டி­ருக்கும் காணாமல் போன­வர்­களின்   உற­வு­க­ளான பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு பிர­தான வேட்­பா­ளர்கள் எவ்­வா­றான தீர்வை வழங்­கப்­போ­கின்­றார்கள் என்­பது  ஒரு கேள்­வி­யாக  எழுந்து நிற்­கின்­றது.  அதா­வது மிக முக்­கி­ய­மாக  மூன்று கட்­சி­க­ளி­லி­ருந்தும்  மூன்று பிர­தான வேட்­பா­ளர்கள் தேர்தல் களத்தில் இறங்­கி­யுள்­ளனர். இவர்கள்  மூவரும்  இந்த காணா­மல்­போனோர் விவ­கா­ரத்தில் எவ்­வா­றான தீர்­வுத்­திட்­டத்தை   முன்­வைக்­கப்­போ­கின்­றனர் என்­பதே  இங்கு  மிக முக்­கி­ய­மா­ன­தாக காணப்­ப­டு­கின்­றது.

யுத்த காலத்­தின்­போது  காணா­மல்­போ­ன­தாக  கூறப்­ப­டு­கின்­ற­வர்­களின்  உற­வி­னர்கள் இன்னும் ஒரு­வி­த­மான  எதிர்­பார்ப்­பு­ட­னேயே வாழ்ந்­து­கொண்­டி­ருக்­கின்­றனர். தமது உற­வு­க­ளுக்கு நடந்­தது என்ன என்­பது தொடர்பில்  இந்த மக்கள்  அதி­காரத் தரப்­பிடம் கேள்வி எழுப்பி நிற்­கின்­றனர்.  உண்­மையை வெளிப்­ப­டுத்­து­மாறும்  பாதிக்­கப்­பட்ட மக்கள் கோரு­கின்­றனர். ஆனால்  யுத்தம் நிறை­வ­டைந்து ஒரு தசாப்தம் நிறை­வ­டைந்து விட்ட நிலை­யிலும் பாதிக்­கப்­பட்ட மக்­களின் கேள்­வி­க­ளுக்கு  அதி­கா­ரத்­த­ரப்­பி­னரால் பதி­ல­ளிக்க முடி­யாத நிலை­மையே  நீடிக்­கி­றது.

ஒவ்­வொரு முறையும் தேசிய மட்டத் தேர்­தல்கள் நடை­பெறும் போதும் பிர­தான கட்­சி­களின் வேட்­பா­ளர்கள்   எவ்­வாறு  காணா­மல்­போ­னோரின்  பிரச்­சி­னைக்கு தீர்வைப் பெற்­றுக்­கொ­டுப்­பார்கள் என்று எதிர்­பார்க்­கப்­படும். தேர்­தலின் போதும் சில  வாக்­கு­று­திகள் வேட்­பா­ளர்­க­ளினால் மக்­க­ளுக்கு வழங்­கப்­படும். எனினும்  ஆட்­சிக்கு வந்­ததன் பின்னர் ஆட்­சி­யா­ளர்கள்  அந்த வாக்­கு­று­தி­களை  மறந்­து­வி­டு­கின்ற நிலை­மையை காண்­கின்றோம்.  அதுதான்  தொடர்ந்து கதை­யா­க­வுள்­ளது.

disa bat காணாமல் போனோரின் உறவுகளுக்கு பதிலளிக்க வேட்பாளர்களின் திட்டம் என்ன?அத­னால்தான் இம்­முறை ஜனா­தி­ப­தி­தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்ற மூன்று பிர­தான வேட்­பா­ளர்­க­ளான சஜித் பிரே­ம­தாச,  கோத்­த­பாய ராஜ­பக் ஷ, மற்றும் அநு­ர­கு­மார திஸா­நா­யக்க ஆகியோர்   இந்த காணா­மல்­போ­னோரின்  பிரச்­சி­னைக்கு என்ன தீர்வை முன்­வைப்­பார்கள் என்­பது தொடர்­பான கேள்­விகள் எழுப்­பப்­ப­டு­கின்­றன. காணா­மல் ­போ­னோரின் உற­வி­னர்­க­ளுக்கு இந்த பிர­தான வேட்­பா­ளர்கள் வழங்­கப்­போகும்  பதில் என்ன? அவர்கள் முன்­வைக்­கப்­போகும் தீர்வு என்ன? என்­பதே இங்கு தீர்க்­க­மா­ன­தாக  பார்க்­கப்­ப­டு­கின்­றது.

2009ஆம் ஆண்டு  யுத்தம் முடி­வ­டைந்­த­வுடன்  இந்த காணா­மல் ­போ­னோரின் உற­வி­னர்கள்  தமது பிள்­ளை­க­ளுக்கு

மற்றும்  உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை வெளிப்­ப­டுத்­து­மாறு கோரி போராட்­டங்­களை நடத்த ஆரம்­பித்­தனர்.  2009ஆம் ஆண்­டி­லி­ருந்தே இந்த பாதிக்­கப்­பட்ட மக்கள் வேத­னை­யு­டனும்  தவிப்­பு­ட­னுமே வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்­றனர்.  2009ஆம் ஆண்­டிற்குப் பின்னர் இருந்த அப்­போ­தைய அர­சாங்கம் இந்த காணா­மல்­போனோர் பிரச்­சினை  தொடர்பில் சரி­யான தீர்வை முன்­வைக்­க­வில்லை. அதனால்  காணா­மல்­போ­னோரின்   உற­வுகள் பாரிய விரக்­தி­யு­டனும்  வேத­னை­யு­டனும் இருந்­தனர்.   காணாமல் போனோர் என  எவரும் இல்லை என்ற கருத்­துக்­களும் அவ்­வப்­போது முன்­வைக்­கப்­பட்டு வந்­தன.

ஐக்­கிய நாடுகள் சபையும் சர்­வ­தேச சமூ­கமும்  இந்த விடயம் தொடர்பில் தொடர்ச்­சி­யாக அழுத்­தங்­களைப் பிர­யோ­கித்து வந்­தன.  2010 ஆம் ஆண்டு அப்­போ­தைய மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்­கத்­தினால் கற்­ற­றிந்த பாடங்­களும் நல்­லி­ணக்­கமும் தொடர்­பான ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்­டது. அந்த ஆணைக்­குழு  யுத்தம் இடம்­பெற்­ற­தற்­கான காரணம் என்ன என்­பது தொடர்­பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்­பித்­தது. எனினும் நல்­லி­ணக்க ஆணைக்­குழு வடக்கு, கிழக்கில் நடத்­திய விசா­ரணை அமர்­வு­க­ளின்­போது சாட்­சி­ய­ம­ளித்த பாதிக்­கப்­பட்ட மக்கள்  காணாமல் போயுள்ள தமது  உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது  என்­பதை வெளிப்­ப­டுத்­து­மாறு  கோரி மன்­றாடி கதறி அழு­ததை காண­மு­டிந்­தது. அந்­த­ள­விற்கு அந்த மக்கள் வேத­னை­யுடன்  இருக்­கின்­றனர். வடக்கு கிழக்கில் அதி­க­ளவில் இந்த விசா­ரணை அமர்­வு­களில் காணாமல்  போனோரின் உற­வி­னர்­களே சாட்­சி­ய­ம­ளித்­தனர்.

எனினும்  நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின்  பரிந்­து­ரைகள்  முன்­வைக்­கப்­பட்ட போதிலும்   காணாமல் போனோரின் பிரச்­சி­னைக்கு தீர்வு கிடைக்­க­வில்லை.  எப்­ப­டி­யி­ருப்­பினும் பல்­வேறு அழுத்­தங்­க­ளுக்கு மத்­தியில்  கடந்த 2013ஆம் ஆண்டு  அப்­போ­தைய மஹிந்த அர­சாங்­கத்­தினால்  காணா­மல்­போனோர் தொடர்­பான  ஜனா­தி­பதி ஆணைக்­குழு  நிய­மிக்­கப்­பட்­டது.  இந்த ஆணைக்­கு­ழு­விற்கும் பாதிக்­கப்­பட்ட மக்கள் தக­வல்­களை வழங்­கினர்.  சுமார் 19ஆயி­ரத்­துக்கும் அதி­க­மான  எழுத்­து­மூல முறைப்­பா­டுகள் காணாமல் போனோர் தொடர்பில் அந்த ஆணைக்­கு­ழு­விற்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டன.  அது­மட்­டு­மன்றி  ஜெனிவா மனித உரிமை பேர­வையில்  பல்­வேறு பிரே­ர­ணை­களும்  நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்த நிலையில் அவற்றில்  இந்த காணா­மல் ­போனோர் விவ­கா­ரத்­துக்கு தீர்­வு­கா­ணப்­ப­ட­வேண்­டு­மென வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்­தது.  இருப்­பினும்  இந்தப் பிரச்­சினை தொடர்ந்து நீடித்­துக்­கொண்டு செல்­கின்­றதே தவிர   அதி­கா­ரத்தில்  இருக்­கின்ற தரப்­பினர்  அதற்கு ஒரு விடிவைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கு எத்­த­ணிக்­க­வில்லை.

இந்த சூழ­லி­லேயே  2015ஆம் ஆண்டு மிகுந்த எதிர்­பார்ப்­பு­க­ளுடன்  நல்­லாட்சி அர­சாங்கம் பத­விக்கு வந்­தது. நல்­லாட்சி  அர­சாங்கம் இந்த பிரச்­சி­னை­க­ளுக்கு  தீர்வை வழங்கும் என பர­வ­லாக எதிர்­பார்க்­கப்­பட்­டது. அதே­போன்று 2015ஆம் ஆண்டு  ஜெனி­வாவில் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணைக்கும் இலங்கை  இணை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­தது.

disappea 2 காணாமல் போனோரின் உறவுகளுக்கு பதிலளிக்க வேட்பாளர்களின் திட்டம் என்ன?ஆனாலும்   காணா­மல்­போனோர் தொடர்­பான  பிரச்­சி­னைக்கு தீர்வைக் காண்­பதில் நல்­லாட்சி அர­சாங்­கமும்   அலட்­சி­யப்­போக்­கு­ட­னேயே செயற்­பட்­டது. 2017ஆம் ஆண்டு  காணா­மல்­போனார் குறித்து ஆராய்­வ­தற்­கான அலு­வ­லகம் நிய­மிக்­கப்­பட்டு   ஆணை­யா­ளர்­களும்  நிய­மனம் செய்­யப்­பட்­டனர். அந்த அலு­வ­லகம் தற்­போது இயங்கி வரு­கி­றது. எனினும் இது­வரை  காணா­மல்­போ­னோ­ருக்கு என்ன நடந்­தது என்­பதும்  கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை.

தற்­போ­தைய நல்­லாட்சி  அர­சாங்­கத்தில் பிர­தமர்  ஒரு கட்­டத்தில்   நடந்து முடிந்த அனைத்து விட­யங்­க­ளையும் மறந்து மன்­னித்து செயற்­ப­டுவோம் என்ற கருத்­துப்­பட வடக்கில் உரை­யாற்­றி­யி­ருந்தார்.   இவ்­வா­றான கருத்­துக்கள் பாதிக்­கப்­பட்ட மக்­களை மேலும் காயப்­ப­டுத்­து­வ­தா­கவே  அமைந்­தன.  காணாமல் போன­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை கண்­டு­பி­டிக்­காமல் எவ்­வாறு பழைய விட­யங்­களை மறக்க முடியும் என்று பாதிக்­கப்­பட்ட மக்கள் கேள்வி எழுப்­பினர். எப்­ப­டி­யி­ருப்­பினும் தற்­போ­து­வரை இந்தப் பிரச்­சி­னைக்கு தீர்வு காணப்­ப­ட­வில்லை. நல்­லாட்சி  அர­சாங்கம் இந்தப் பிரச்­சி­னைக்கு தீர்வைக் காணும் என  எதிர்­பார்க்­கப்­பட்ட போதிலும் அது நடக்­க­வில்லை.

காணா­மல்­போ­னோரின் உற­வுகள் பல்­வேறு   சமூக   பொரு­ளா­தார மற்றும் மனி­தா­பி­மானப் பிரச்­சி­னை­க­ளுக்கு மத்­தியில்  பாரிய  இன்­னல்­க­ளுடன்  வாழ்ந்து வரு­கின்­ற­னர் ­ச­மூக பாது­காப்பு உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்­களில் இந்த மக்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். அவர்­களின் வேத­னைக்கு அதி­கா­ரத்தில் இருக்­கின்ற தரப்பு பதில் கூறி­யா­க­வேண்டும்.

விசே­ட­மாக   என்ன நடந்­தது என்­பதை கண்­டு­பி­டித்து உண்­மையை வெளிப்­ப­டுத்த வேண்­டி­யது   அர­சாங்­கத்தின் கட­மையும் பொறுப்­பு­மாகும். அதி­லி­ருந்து வில­கி­யி­ருக்க முடி­யாது. ஆனால்  அர­சாங்­கத்தை பொறுத்­த­வ­ரையில்

இந்தப் பிரச்­சி­னையில்  கைவைக்க  தயங்­கு­வ­தா­கவே தெரி­கின்­றது. காரணம்  இந்த பிரச்­சி­னையை கையா­ளும்­போது அது  கடும்­போக்­கு­வா­தி­க­ளுக்கும் இன­வா­தி­க­ளுக்கும் தீனி­போ­டு­வ­தாக அமைந்­து­விடும் என்று அர­சாங்கம் கரு­து­வ­தா­கவே தெரி­கி­றது. இதனால் அர­சாங்­கத்தின் இருப்­புக்கு நெருக்­கடி ஏற்­படும் என்று  அதி­கா­ரத்தில் இருக்­கின்­ற­வர்கள் எண்­ணலாம். ஆனால் அதற்­காக காணா­மல்­போ­னோ­ருக்கு என்ன நடந்­தது என்­பதை   தொடர்ந்து  கண்­டு­பி­டிக்­காமல் இருக்க முடி­யாது.

இந்த நிலை­யி­லேயே தற்­போது மீண்­டு­மொரு  ஜனா­தி­பதி தேர்தல் நடை­பெ­ற­வுள்­ளது. அதி­கா­ரத்தை கைப்­பற்ற   தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்ள  பிர­தான வேட்­பா­ளர்கள்,  தாம்  ஜனா­தி­ப­தி­யா­கி­யதும்   என்ன செய்­யப்­போ­கிறோம் என்­பதை   வெளி­யி­டு­வ­தற்கு ஆரம்­பித்­துள்­ளனர்.  விரைவில்  தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களும் வெளி­யி­டப்­படும். அதன்­படி  பிர­தான வேட்­பா­ளர்­க­ளாக கள­மி­றங்­கி­யுள்ள   சஜித் பிரே­ம­தாச,   கோத்­த­பாய ராஜ­பக் ஷ,   மற்றும் அநு­ர­கு­மா­ர­ தி­ஸா­நா­யக்க ஆகியோர் இந்த காணா­மல்­போனோர் விவ­கா­ரத்­துக்கு கூறப்­போகும் பதில் என்ன? இவர்கள் மூவரும் தேர்­த­லுக்கு முன்னர் இந்த விடயம் தொடர்பில் தமது நிலைப்­பாட்டை அறி­விக்­க­வேண்டும். மிக முக்­கி­ய­மாக காணா­மல் ­போ­னோரின்   உற­வி­னர்கள் எதிர்­கொண்டு வரு­கின்ற  இன்­னல்­களை கருத்தில் கொண்டு   இந்த விட­யத்தில்  தீர்­மானம் எடுக்­கப்­ப­ட­வேண்டும்.

அதா­வது   தாம் ஜனா­தி­ப­தி­யா­கி­ய­வுடன்  காணாமல் போனோரின் பிரச்­சி­னைக்கு எவ்­வா­றான  தீர்வை முன்­வைப்போம்  என்­பது தொடர்பில் தெளி­வான விட­யத்தை மக்­களின் முன் கூற­வேண்டும். வேட்­பா­ளர்கள் இந்த விட­யத்தில் முன்­வைக்­கப்­போகும் யோசனை அல்­லது  தீர்­வுத்­திட்டம்  என்ன என்­பது தொடர்பில்  பாதிக்­கப்­பட்ட மக்கள் ஆர்­வத்­துடன் இருக்­கின்­றனர். யுத்தம் முடி­வ­டைந்து  ஒரு தசாப்தம் கடந்தும் இந்தப் பிரச்­சினை   தீர்க்­கப்­ப­டாது உள்­ளமை தொடர்­பிலும்    அவற்றை கையாள்­வ­தற்கு அதி­கா­ரத்தில் இருக்­கின்­ற­வர்கள் தயங்­கு­கின்ற சூழ­லிலும் மக்கள் விரக்தி நிலையை அடைந்­தி­ருக்­கின்­றனர். எனவே பாதிக்­கப்­பட்ட மக்கள்  அல்­லது காணா­மல்­போ­னோரின் உற­வி­னர்கள்  திருப்­தி­ய­டையும் வகை­யி­லான வேலைத்­திட்­டங்கள் அல்­லது அணு­கு­மு­றைகள் பிர­தான வேட்­பா­ளர்­க­ளினால் முன்­வைக்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கி­றது.

இந்த செயற்­பாட்டில் தொடர்ந்தும்  பாதிக்­கப்­பட்ட மக்­களை ஏமாற்­றலாம் என்று யாரும் கரு­தக்­கூ­டாது. மிக முக்­கி­ய­மாக  நாட்டின்  ஆட்சி அதி­கா­ரத்தை   தன­தாக்கு­வ­தற்கு எதிர்­பார்த்­தி­ருக்­கின்ற பிர­தான வேட்­பா­ளர்கள் மூவரும்  இந்த விடயம் தொடர்பில்  தெளிவான பதிலை வழங்கவேண்டும்.  காணாமல்போனோரின்  உறவுகள் விடிவின்றி   தொடர்ந்தும்   எதிர்பார்ப்புடனும்  தவிப்புடனும்   வாழ்ந்து வருகின்றனர். இது தொடர்பில் வேட்பாளர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். ஜனாதிபதி வேட்பாளர்கள்  முழுநாட்டு மக்களினதும் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் தமது அவதானத்தை செலுத்தவேண்டியது  அவசியமாகும். எனவே அதற்கு ஏற்றவகையில் பிரச்சினைகளுக்கான தீர்வையும்  விரக்தியில் இருக்கின்ற மக்களுக்கான விடிவையும் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

உறவுகளை தொலைத்துவிட்டு  அவர்களை கண்டுபிடிப்பதற்காக போராடிக்கொண்டிருக்கும் மக்கள்   இந்த நாட்டு பிரஜைகள் என்பதை  அனைத்து பிரதான வேட்பாளர்களும் கவனத்தில் கொள்வது அவசியமாகும்.  தாம் வெற்றிபெற்ற பின்னர்  எந்த  அணுகுமுறையில்  இந்த காணாமல்போனோர் விவகாரத்தை  கையாள்வோம் என்பது தொடர்பில் வேட்பாளர்கள் ஒரு  தெளிவான வாக்குறுதியை மக்களுக்கு வழங்குவது முக்கியமாகும்.  அதில்  மக்களுக்கு திருப்தியும் நம்பிக்கையும் ஏற்படவேண்டும்.

தொடர்ந்து இந்தப் பிரச்சினையை இழுத்தடித்துக்கொண்டு அல்லது அலட்சியப்படுத்திக்கொண்டு பயணிக்கலாம் என்று யாரும் கருதக்கூடாது. தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதனை அறிந்துகொள்ளும் உரிமை  மக்களுக்கு உள்ளது. எனவே பிரதான வேட்பாளர்கள் மூவருக்கும் இந்த விடயத்தில் பாரிய பொறுப்பு உள்ளது. தாம் ஜனாதிபதியானால்  காணாமல் போனோர் விவகாரத்தில் எவ்வாறான அனுகுமுறையை முன்னெடுத்து பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரை துடைப்போம் என்பது தொடர்பில் வேட்பாளர்கள் மூவரும்  தெளிவாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூறவேண்டியது அவசியமாகின்றது.

ரொபட் அன்­டனி