கமலா ஹாரிஸிடம் மன்னிப்புக் கோரிய மலேசிய தொலைக்காட்சி

கமலா ஹாரிஸ் தாயை சட்டவிரோத குடியேறி எனக் கூறிய மலேசிய தொலைக்காட்சி மன்னிப்புக் கோரியுள்ளது.

அண்மையில் நடந்த அமெரிக்க தேர்தலில், அமெரிக்க துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் குறித்து செய்தியை வாசிக்கும் போது அவரை சட்டவிரோத குடியேறியின் மகள் எனக் குறிப்பிட்டதற்காக TV3 எனும் மலேசிய தொலைக்காட்சி மன்னிப்புக் கோரியுள்ளது.

கமலா ஹாரிஸ் தந்தை ஜமாக்காவைச் சேர்ந்தவர் என்றும் தாய் இந்தியாவிலிருந்து வந்த சட்டவிரோத குடியேறி என்றும் அத்தொலைக்காட்சி குறிப்பிட்டமை பெரும் விமர்சினத்திற்கும் கண்டனத்திற்கும் உள்ளாகியிருந்தது. இதையடுத்தே குறித்த தொலைக்காட்சி மன்னிப்புக் கோரியுள்ளது.

அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் மற்றும் கருப்பின துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறமை குறிப்பிடத்தக்கது. இவரது தாய் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர்.