கன்னியா வெந்நீர் ஊற்று சிவன் ஆலய பூசைகளுக்கு காவல்துறை தடை-ஆலய அறங்காவலர் சபை

கன்னியா வெந்நீர் ஊற்று சிவன் ஆலயம் கடந்த ஒன்றரை வருடத்திற்கு மேலாக முறையான நிர்வாக சபையின் கீழ் மக்களை ஒன்றிணைத்து சிறப்பாக இயங்கிவருவது யாவரும் அறிந்ததே. இவ்வழிபாட்டில் பல்வேறு இடஞ்சல்கள் இருந்தாலும் தொல்பொருள் திணைக்களத்தாலோ பேரினவாதத்தாலோ பூசையினை நிறுத்த முடியவிலல்லை.
ஆனால் கன்னியா பிள்ளையார் ஆலய உரிமையாளரான திருமதி கோகில ரமணி அவர்கள் ( இவருக்கு சிவன் ஆலயத்திலோ, அது அமைந்திருக்கும் நிலத்திற்கோ எந்தவித உரிமையும் இல்லை) உப்பவெளி பொலிஸ் நிலையத்தில் கன்னியா சிவன் ஆலய அறங்காவலர் சபைக் எதிராக 07.06.2020 அன்று செய்த முறைப்பாட்டுக்கு அமைய 08.06.2020 கன்னியா சிவன் ஆலய அறங்காவலர் சபையினை அழைத்து ஆலயம் பதிவு செய்தால் மட்டுமே பூசை நடத்த முடியும் எனும் தீர்ப்பை எமக்குத் தந்திருக்கின்றர்.
1. அரச பதிவுடன் வந்தால் மட்டுமே ஆலய பூசையினை செய்ய முடியும் என காவல்துறை அதிகாரி தடுக்கின்றார்.
2. ஆனால் நீதிமன்றத் தீர்ப்பு கன்னியாவில் வழிபாட்டுக்குத் தடையில்லை என்கிறது.
3. தொல் பொருள் எல்லைக்குள் இருக்கும் ஆலயத்திற்கு திணைக்களம் பதிவைத் தர மறுக்கின்றது.
4.. மக்களால் தெரிவு செய்யப்பட்ட நிர்வாகம் முறையாக ஆலயத்தை நிர்வகிக்கின்றது இயக்குகின்றது.
5. ஆலயத்தை நிர்வகிக்க பதிவு அவசியமானது இல்லை என்பதையும் சட்டம் சொல்கிறது.
உண்மையில் இந்தத்தடை சிவன் ஆலயத்திற்கு ஒரு சட்டரீதியான அங்கிகாரத்தைப் பெற்றுத் தருவதற்கு ஒரு வாய்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
எனவே சட்டத்தின் மூலம் அதனைப் பெற்றுக்கொள்ள நிர்வாகம் செயற்பட்டு வருகின்றது.
இவ்விடயத்தை பேசுபொருளாக்கி, உணர்வைத்தூண்டி, கலவரத்தை ஏற்படுத்த நாம் விரும்பவில்லை அது மிகப் பாதகமான விளைவையே ஏற்படுத்தும்.
விரைவில் பூசை வழிபாடு எம்பெருமான் துணையுடன் முழுமையான சட்ட அனுமதியுடன் நடைபெறும்.
இது தொடர்பாக மேலதிக தகல்வல்களைப் பெற விருப்பமுடையோர் எம்மைத் தொடர்பு கொள்ளவும். தயவு செய்து தவறான பதிவுகளையோ, திரிபுபடுத்தல்களையோ, உணர்ச்சியூட்டல்களையோ ஏற்படுத்த வேண்டாம். முழுமையான விடயத்தை விரைவில் வெளிப்படுத்துவோம்.
இப்பதிவானது பூசையினப் பொறுப்பெடுத்தவர்களுக்கு வழங்கும் ஒரு அறிவிப்பாகும் அத்துடன் எவர் மனதையும் புண்படுத்தும் வகையில் இதில் இடுகைகளைப் பதிவிட வேண்டாம் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்வதுடன் காத்திரமான ஆலோசனைகளை வரவேற்கீன்றோம்.
நன்றி.
க.துஷ்யந்தன்,
செயலாளர்,
கன்னியா வெந்நீர் ஊற்று சிவன் ஆலய அறங்காவலர் சபை,
கன்னியா, திருகோணமலை.