ஓரினச் சேர்க்கையாளர்கள், ‘கடவுளின் பிள்ளைகள்’ – போப் பிரான்சிஸ்

ஓரினச் சேர்க்கையாளர்கள், கடவுளின் பிள்ளைகள் என்று கூறியுள்ள போப் பிரான்சிஸ், அவர்களும் குடும்பத்துடன் வாழ முழு உரிமை உண்டு எனத்  தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரே பாலினத்தவர்கள் இணைந்து குடும்பமாக வாழும் வகையில் அதை அங்கீகரிக்கும் சட்டங்கள் திருத்தப்பட வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஓரினச்சேர்க்கை என்பதை சில நாடுகள் அங்கீகரிக்கின்றன. சில எதிர்க்கின்றன. அந்த வகையில் போப் பிரான்சிஸ் ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.

பிரான்சிஸ்கோ என்ற ஆவணப்படத்திற்காக போப் கருத்துக்களை தெரிவித்த போது போப் இவ்வாறு கூறியுள்ளார்.

இதுபோன்ற கருத்துக்களை போப் பிரான்சிஸ் நேரடியாகத் தெரிவிப்பது இதுவே முதன்முறை என்று கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.