ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு இலங்கையிலும் ஆதரவாளர்கள் – ஐ.நா. அறிக்கையில் தகவல்

ஐ.எஸ். அமைப்பை பின்பற்றுபவர்கள் இலங்கையில் இருக்கிறார்கள் என்று ஐ.நாவின் அறிக்கை ஒன்றில் தெரிய வந்துள்ளது.

கடந்த ஆண்டு 3 மாதங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட எல்லை தாண்டிய தாக்குதல்களுக்கு பொறுப்பான பயங்கரவாத குழு தெஹ்ரி – இல் தலிபான் பாகிஸ்தான் என்ற ஐ.நாவின் அறிக்கையிலேயே இந்த விடயம் வெளிப்பட்டுள்ளது.

தெற்காசியாவில் இணைவழி மூலமாக ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு அதிகரித்து வருகின்றது. இந்த அமைப்பை இலங்கை மற்றும் மாலைதீவில் பின்பற்றுபவர்கள் உள்ளனர் என்று வொய்ஸ் ஒவ் ஹின்ட்ஸ் என்ற பிராந்திய ஆங்கில இதழிலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

மாலைதீவில் செயல்படும் ஐ.எஸ்.ஐ.எல். என்ற அமைப்பு ஐ.ஸ்.ஐ.எஸ். அமைப்புடன் நெருங்கிய தொடர்புகளை வளர்க்க முயற்சிக்கிறது என்றும் ஐ.நாவின் அறிக்கை வெளிப்படுத்துகின்றது. அல் முஹாஜிர் என்ற ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான ஐ.எஸ். அமைப்பின் தளபதியே, இலங்கை, இந்தியா, மாலைதீவுகள், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய தெற்காசிய நாடுகளுக்கான ஐ.எஸ். அமைப்பின் தலைமைப் பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகின்றது.