ஐ .எஸ். ஐ மற்றும் அல்கொய்தா அமைப்புக்கள் இந்தியாவில் காலூன்றுகின்றன

உலகளாவிய தீவிரவாத இயக்கங்களான ஐ.எஸ்.ஐ மற்றும் அல்கொய்தா அமைப்புகள் இந்தியாவில் காலூன்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த இயக்கங்களின் செயற்பாடுகள் இந்தியாவில் மிகக் குறைவாகவே இருந்தன. எனினும் இந்தியாவில் இவர்கள் தமது செயற்பாடுகளை தீவிரப்படுத்த எண்ணியுள்ளதாக அறியமுடிகிறது.

சிறிலங்காவின் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், தமது செயற்பாட்டை தெற்காசியாவில் தீவிரப்படுத்த முயற்சிப்பதாக   தெரியவருகிறது.

விலியத் அல் ஹிந்த் எனப்படும் ஐ.எஸ்.ஐ யின் இந்தியாவிற்கான புதிய தலைவராக அபு முகமது அல் பெங்காளி நியமிக்கப்பட்டுள்ளார்.

மக்கள் மீதான தாக்குதலை இந்த அமைப்பு இந்தியாவிலும், பங்களாதேஷிலும் நிகழ்த்தப் போவதையே இந்த நடவடிக்கை காட்டுகின்றது என்று அறியமுடிகின்றது.

இந்தியா மற்றும் சிறீலங்கா போன்ற நாடுகளில் காணப்படும் இன முரன்பாடுகள் மற்றும் அரசியல் குழப்பங்கள் இந்த அமைப்புக்களின் வளர்ச்சிக்கான சூழ்நிலைகளை உருவாக்கி வருவதாக அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.