ஐதேக வுக்குள் இனவாதம்;வெளிப்படுத்திய அர்ஜுன

எதிர்காலத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்குள் இனவாதமற்ற ரீதியில் முன்னோக்கி செல்ல வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் கம்பஹா மாவட்ட தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.கம்பஹா, எந்தேரமுல்ல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி இன்று இரண்டாக பிளவடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதனை ஒன்றிணைக்க பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டாலும் இறுதியில் இரு குழுக்களாக தேர்தலில் போட்டியிட வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விளையாட்டிற்குள் எந்த சந்தர்ப்பத்திலும் இனவாதம் இருந்ததில்லை என தெரிவித்த அவர், தற்போது கட்சிக்கு உள்ளேயும் அந்த நடவடிக்கையை முன்னெடுக்க முயற்சி செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விளையாட்டில் இனவாதம் இல்லை எனஅர்ஜுன ரணதுங்க கூறுவது உண்மைக்கு புறம்பானது என்பது வெளிப்படை.நாட்டை பிரதிநிதித்துவ படுத்தும் விளையாட்டுக்கு குழுக்களில் தமிழ் வீரர்கள் முழுமையாக புறக்கணிக்கப் படுவதும்,தமிழ் பிரதேசங்களிலில் விடையாட்டு அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பாரபட்சம் கட்டப்படுவதும் காலகாலமாக நடந்துவருவதே.

அண்மையில் சிறிலங்கா சனாதிபதியுடனான சந்திப்பொன்றில் இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவர்கள் மகேல ஜெயவர்த்தன,குமார் சங்கக்கார ஆகியோர் பாரபட்சம் கட்டப்படுவது தொடர்பில் விடயங்களை சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.