ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் பெண் விண்வெளி வீராங்கனை – அறிவிப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் பெண் விண்வெளி வீராங்கனையாக நவ்ரா அல் மற்றொஷி(Noura Al Matrooshi) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என அந்நாட்டின் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்துாம்மால் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தகவில்,அரபு அமீரகத்தின் முதல் பெண் விண்வெளி வீராங்கனையாக நவ்ரா அல் மற்றொஷி(Noura Al Matrooshi)   அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் 4000 விண்ணப்பங்களிலிருந்து இரு விண்வெளி வீரர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் நவ்ரா அல் மற்றொஷி மற்றும் மொஹம்மது அல் முல்லாவும் ஆவர். இவர்கள் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள நாசா விண்வெளி மையத்திற்கு பயிற்சிக்காக அனுப்பப்பட உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.