“எனது தந்தையைக் கொன்றவர்களை மன்னித்து விட்டேன்.” – ராகுல் காந்தி

தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்காளம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலுக்காக தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

இன்று (17) புதுச்சேரிக்கு தனது தேர்தல் பிரச்சார பயணமாக வந்துள்ள ராகுல் காந்தி தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, ‘எனது தந்தையை (ராஜீவ் காந்தி) கொன்றவர்கள் மீது எந்தவித வெறுப்புணர்வும் இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தனது பயணத்தின் போது, முதலமைச்சர் நாராயணசாமி உடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் மீனவ சமுதாய மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

அடுத்ததாக புதுச்சேரி பாரதிதாசன் கல்லூரி மாணவிகளுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார். அப்போது கல்லூரி மாணவி ஒருவர், ராஜீவ் காந்தியின் மரணம் குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ராகுல்காந்தி, “எனக்கு என் தந்தையைக் கொன்றவர்கள் மீது எந்த கோபமும், வெறுப்புணர்வும் அறவே இல்லை. நான் எனது தந்தையை இழந்து தவித்த காலம் மிகவும் சோதனையானது. நான் தற்போது எனது தந்தையைக் கொன்றவர்களை மன்னித்து விட்டேன்.” என்று ராகுல்காந்தி அந்த மாணவியின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.