எங்களுக்கு நீதியை பெற்றுத் தாருங்கள் – பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவரின் உறவினர்

பல கஷ்டங்களுடன் வாழ்ந்து வருகிறோம் கணவன் இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என திருகோணமலை தம்பலகாமத்தை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளில் ஒருவரான சுந்தரலிங்கம் குணசுந்தரி தெரிவித்தார்.

1975ம் ஆண்டு சின்னையா சுந்தரலிங்கம் என்பவரை திருமணம் செய்தேன் இவர் இலங்கை போக்குவரத்து சபையில் சாரதியாக கடமையாற்றி வந்தார்.

இரு பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் குழந்தையும் இருந்தார்கள் சந்தோசமான குடும்ப வாழ்க்கையில் இணைந்து வாழ்ந்து வந்தோம் 1985 ம் ஆண்டு ஏற்பட்ட வன்செயல் காரணமாக மட்டக்களப்புக்கு சென்றோம் எனது கணவர் கொழும்பு கல்முனை பஸ் சாரதியாக கடமை புரிந்து வந்த நிலையில் 1990 களில் மீண்டும் தம்பலகாமத்திற்கு பிள்ளைகளுடன் வந்தோம் .

பிறகு கந்தளாய் திருகோணமலை பஸ் சாரதியாக இருந்த தருணம் 15 நாட்கள் கடந்து வந்த நிலையில் 1990.6.13 திருகோணமலை டிப்போவில் பஸ்சை நிறுத்தி வரும் வழியில் தம்பலகாமம் சந்தியில் இரானுவத்தினால் கடத்தப்பட்டார் இதனை கணவருடன் கூட வந்தவரே கூறினார்.

இதனை தொடர்ந்து கணவன் காணாமல் போனமை தொடர்பில் கந்தளாய் பொலிஸில் முறைப்பாடு செய்தேன் இற்றை வரைக்கும் எந்த தகவலும் இன்மை காரணமாக பெரும் கஷ்டத்துக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றேன் . இரு பிள்ளைகளுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளேன் 2006.3.23 ந் திகதி (காணாமல் ஆக்கப்பட்ட போது வயது 39) வீட்டில் இருந்த என் கடைசி மகனையும் விடுதலைப் புலிகள் அழைத்து சென்றுவிட்டார்கள்.

எனது கணவன் மகனையும் இழந்து தவிக்கிறேன் முறைப்பாடு செய்யாத இடமில்லை எங்களுக்கு நீதியை பெற்றுத் தாருங்கள் இழைத்த கொடுமைக்கு பதில் கூற வேண்டும் அரசாங்கமே பொறுப்புச் செல்ல வேண்டும் எனவும் காணாமல் போன  தனது கணவரான சின்னையா சுந்தரலிங்கத்தின் மனைவியே இவ்வாறு தெரிவித்தார்.