ஊடக அடக்குமுறை மற்றும் ஊழல்வாதிகள் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் ஊடக அடக்குமுறை மற்றும் ஊழல்வாதிகள் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு கோரி மட்டக்களப்பில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்னால் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறையை நிறுத்துää வெளியேறு வெளியேறு ஊடக சுதந்திரத்தை மிதிக்கும் அரச அதிகாரியே வெளியேறு, அரச அதிகாரிகளே ஊடகவியலாளர்களை அடக்க நினைக்காதே போன்ற பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

செங்கலடி பிரதேச செயலாளர் வில்வரெட்ணம் அவர்கள் ஊடகவியலாளரும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளருமான செ.நிலாந்தன் மீது போலியான அரச ஆவனங்களை பயன்படுத்தி போலியான செய்திகளை வெளியிட்டுவருவது தொடர்பில் முறையான விசாரணைசெய்யுமாறு கோரியும் பிரதேச செயலாளர் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்களை அரசாங்க விசாரணை செய்யவேண்டும் எனவும் இதன்போது கோரிக்கை முன்வைக்கப்பட்டது.IMG 20191219 WA0039 ஊடக அடக்குமுறை மற்றும் ஊழல்வாதிகள் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடுசெய்திருந்த இவ் ஆர்ப்பாட்டத்தில் மதகுருமார்,சிவில் சமூக அமைப்புகள், பொதுமக்கள் பெண்கள் அமைப்புகள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ப.அரியநேத்திரன் ,மட்டகளப்பு மாவட்ட பொதுஜென பெரமுன கட்சியின் அமைப்பாளர் ப.சந்திரகுமார் மற்றும் பொது மக்கள்,என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ப.அரயநேத்திரன்,மட்டகளப்பு மாவட்ட பொதுஜென பெரமுன அமைப்பாளர் ப.சந்திரகுமார் ஆகியோரிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

,